டொனால்ட் ட்ரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே
டொனால்ட் ட்ரம்ப் அமைச்சரவையில் இந்தி வம்சாவளி பெண் நிக்கி ஹாலே இடம்பெற வாய்ப்புள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தெற்கு கரோலினா ஆளுநராக பதவி வகித்தவருமான நிக்கி ஹாலே இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் கணிப்புகள் அனைத்துமே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என கூறிவந்த நிலையில், அவற்றை பின்னுக்குத்தள்ளி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதியன்று அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

தற்போது, புதிய அமைச்சரவை அமைப்பதில் ட்ரம்ப் தீவிரவாக செயல்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தி்த்து வருகிறார். ட்ரம்ப் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியலை அதற்கென ட்ரம்ப் நியமித்த குழுவினர் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய
வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, ட்ரம்ப் அமைச்சரவையில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. அவரது பெயர் தீவிர பரிசீலனையில் உள்ளது. இதனிடையே தெற்கு கரோலினாவில் இரண்டாவது முறையாக கவர்னர் பதவி வகிக்கும் நிக்கி ஹாலேவை இன்று ட்ரம்ப் சந்திக்கிறார். எனவே, நிக்கி ஹாலே அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், லூசியானா முன்னாள் கவர்னருமான பாபி ஜின்டாலும் ட்ரம்ப் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது என ஏற்கனவே தகவல் வெளியானது. சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்புக்கு பென் கார்சன் மற்றும் ஜிண்டால் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. ட்ரம்ப் அமைச்சரவையில் இடம் பெற்றால், அமெரிக்காவில் அமைச்சராகும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையும் ஜிண்டாலுக்குக் கிடைக்கும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications