நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் டொனால்டு டிரம்ப், கிரேட்டா துன்பெர்க் ...முடிவு அக்டோபரில்!
ஓஸ்லோ: 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் 329 பேர் உள்ளதாக நோபல் விருது கமிட்டி கூறியுள்ளது.
இந்த பட்டியலில் டொனால்டு டிரம்ப், கிரேட்டா துன்பெர்க், அலெக்ஸி நவல்னி உள்ளிட்ட பலரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக நோபல் விருது கமிட்டி தெரிவித்துள்ளது

நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் மிகவும் கவுரவமிக்க பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.
உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் 329 பேர் உள்ளதாக நோபல் விருது கமிட்டி கூறியுள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்று சூழல் ஆர்வலரும் சமீபத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிரேட்டா துன்பெர்க், ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உள்ளிட்ட பலரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக நோபல் விருது கமிட்டி தெரிவித்துள்ளது. இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு நோபல் கமிட்டி அக்டோபரில் முடிவை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications