தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூரைப் போல் ஒலிம்பிக்ஸுக்கு வந்த "அமெரிக்க,வடகொரிய அதிபர்கள்" வெளியேற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தென்கொரியாவில் தொடங்கியது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்- வீடியோ

  பியாங்சாங்: வடகொரியாவில் பியாங்சாங்கில் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக்ஸுக்கு வந்த அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்களை பாதுகாவலர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  வடகொரியா தலைநகர் பியாங்சாங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2018 போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. இந்த போட்டிகள் பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

  இந்த தொடக்க விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கலந்து கொண்டார். இந்த விழாவில் தென்கொரிய அதிபர் மூன் ஜே உள்பட அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  தோழமை

  தோழமை

  ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரவில்லை என்று நாம் நினைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் வந்தார்கள். அதுவும் தோள் மீது கை போட்டு கொண்டு வந்தார்கள்.

  நாட்டை உலுக்கியது

  நாட்டை உலுக்கியது

  அதை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். அணு ஆயுத சோதனை என்ற பெயரில் கடந்த ஓராண்டாக இந்த நாட்டை உலுக்கி வந்த இருவரும் நண்பர்களாக வந்ததை பார்த்தவுடன் சந்தேகமே இல்லாமல் இருவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் விரட்டிஅடித்தனர்.

  எக்ஸ்ட்ரா பிட்டிங்

  எக்ஸ்ட்ரா பிட்டிங்

  இருவரும் அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்களை போல் உருவ அமைப்பை உள்ள டூபாக்கூர்கள். வேண்டும் என்றே அவர்களை போல் எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் செய்து கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டனர்.

  அமைதி வேண்டாமா?

  அமைதி வேண்டாமா?

  இதுகுறித்து கிம்மை போல் உள்ள அந்த நபர் கூறுகையில் நாங்கள் உலக அமைதியை விரும்பியே இதுபோல் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தோம். ஆனால் எங்களை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றிவிட்டனர். இது மிகவும் தவறானது. அமைதியை யாரும் விரும்பவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Donald Trump, Kim Jong Un impersonators cause stir, kicked out of Olympics Opening Ceremony.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற