உங்க மனைவியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்திடுவேன்: டெட் க்ரூஸை மிரட்டிய டிரம்ப்
நியூயார்க்: குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உள்ள டொனால்டு டிரம்பும், டெட் க்ரூஸும் மனைவிகள் விஷயத்தில் ட்விட்டரில் மோதியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மற்றும் டெட் க்ரூஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். டிரம்புக்கும், டெக்சாஸ் மாநில செனேட்டரான க்ரூஸுக்கும் ஆகவே ஆகாது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர்கள் இருவரும் ட்விட்டரில் மோதியுள்ளனர். க்ரூஸ் டிரம்ப்பின் மனைவி மெலனியாவின் புகைப்படத்தை தனது விளம்பரத்தில் பயன்படுத்திக் கொண்டதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து டிரம்ப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Lyin' Ted Cruz just used a picture of Melania from a G.Q. shoot in his ad. Be careful, Lyin' Ted, or I will spill the beans on your wife!
— Donald J. Trump (@realDonaldTrump) March 23, 2016
பொய் சொல்லும் டெட் க்ரூஸ் ஜி.க்யூ. போட்டோஷூட்டில் இருந்து மெலனியாவின் புகைப்படத்தை எடுத்து அவரது விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளார். ஜாக்கிரதை க்ரூஸ் இல்லை என்றால் உங்கள் மனைவியின் ரகசியங்களை வெளியிட்டுவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு க்ரூஸ் ட்வீட்டியிருப்பதாவது,
Pic of your wife not from us. Donald, if you try to attack Heidi, you're more of a coward than I thought. #classless https://t.co/0QpKSnjgnE
— Ted Cruz (@tedcruz) March 23, 2016
உங்கள் மனைவியின் புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை. டொனால்டு, நீங்கள் ஹெய்டியை தாக்க முயன்றால் நான் நினைத்ததை விட படுகோழை நீங்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications