வரலாற்று சாதனை படைத்தார் ட்ரம்ப்... முதல் மாதத்திலேயே கடைசி இடம் பிடித்த அதிபர்!
வாஷிங்டன்(யு.எஸ்): சி.என்.என்/ஓஆர்சி நடத்திய கருத்துக் கணிப்பில் 53 சதவீதம் பேர், அதிபர் ட்ரம்பின் செயல்பாடுகள் வரவேற்க்கத்தாக இல்லை என்று கூறியுள்ளனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சி.என்.என்/ஓஆர்சி நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகள் நடத்தி, பதிவு செய்து வருகிறார்கள்.

இதுவரையிலும் நடத்தப்பட்டுள்ள அதிபர்களின் முதலாவது கருத்துக் கணிப்புகளில் , ட்ரம்புக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. 44 சதவீதம் மக்கள் மட்டுமே அதிபராக அவருடைய செயல்பாடுகள் சரியாக இருக்கின்றன என்று கூறியுள்ளார்கள். 43 சதவீதம் அதிபரின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
அதே சமயத்தில் குடியரசுக் கட்சியினரில் 90 சதவீதம் பேரும் எதிர்க்கட்சியான ஜன நாயகக் கட்சியினரில் 10 சதவீதம் பேரும் ட்ரம்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
முந்தைய அதிபர்களை ஒப்பீடு செய்யும் போது, பராக் ஒபாமா 76% ஆதரவு பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அடுத்துதாக ஜான் எஃப் கென்னடிக்கு 72 %, ட்வைட் ஐசனோவருக்கு 68%, ஜிம்மி கார்ட்டர் 66%, ரிச்சர்ட் நிக்சன் 59%, பில் க்ளிண்டன் 59% , ஜார்ஜ் டபுள்யூ புஷ் 58% , ஜார்ஜ் ஹெச் டபுள்யூ புஷ் (சீனியர்) 57%. ரொனால்ட் ரீகன் 51% என இடம் பிடித்துள்ளார்கள்.

டொனால்ட் ட்ரம்ப் 44% சதவீத ஆதரவுடன் கடைசியாக இடம் பெற்றிருக்கிறார். கருத்துக் கணிப்பில் சிரியா அகதிகளை அனுமதிக்கலாமா என்ற கேள்விக்கு 54 சதவீதம் ஆதரவுத் தெரிவித்துள்ளனர். 30 சதவீத குடியரசுக் கட்சியினரும் ஆதரவு என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ பார்டரில் சுவர் கட்டுவதற்கு 60 சதவீதம் பேர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை, வெளியுறவு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் ட்ரம்பின் செயல்பாட்டுக்கு பாதிக்கும் மேலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில், 78 சதவீதத்தினர் அதிபர் ட்ரம்ப் இப்படித்தான் இருப்பார் என்று எதிர்ப்பார்த்தோம். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறியுள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications