அதிபராகப்போகும் நேரத்தில் அக்கப்போர்.. அமெரிக்க இதழின் அட்டை பக்கத்தில் ட்ரம்ப் மனைவி நிர்வாண படம்!
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலினா ட்ரம்ப்பின் நிர்வாணப் படம் பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலினாவின் நிர்வாணப் படம் வெளியாகி அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் போட்டியில் களம் இறங்கினார். ஹிலாரிதான் அதிபராக வெற்றி பெறுவார் என்று உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில் செனட் சபை உறுப்பினர்களின் வாக்களிப்பால் திடீர் திருப்பமாக டொனால்ட் ட்ரம்ப் அதிபராக தேர்வாகியுள்ளார்.

அண்மையில் ட்ரம்பின் மனைவி நிர்வாணமாக காட்சியளிக்கும் படம் ஒன்று பத்திரிகையில் வெளியாகி அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிக்யூ என்ற அந்தப் பத்திரிகையின் அட்டைப்படத்தில் வெளி வந்த மெலினாவின் படம், டொனால்ட் ட்ரம்ப் மெலினாவை சந்திப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது.
த நியூயார்க் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட இந்த நிர்வாண படம் 1995ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படம் எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்துதான் அதாவது 1998ம் ஆண்டுதான் டொனால்ட் ட்ரம்ப் மெலினாவை சந்தித்தார். 2005ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அவர்கள் இருவருக்கும் 10 வயதில் பாரன் என்ற மகன் உள்ளார்.
யுகோஸ்லோவேக்கியா நாட்டில் 1970-ம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் பிறந்த மெலினியாவிற்கு தற்போது 48 வயதாகிறது. தொடக்கத்தில் மாடலிங் துறைக்குள் நுழைந்த அவர் நாளாடைவில் அவருடைய நாட்டில் பிரபலமானார்.
பின்னர், இத்தாலியின் தலைநகரம் மிலன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் ஆகிய முக்கிய நகரங்களில் மாடல் அழகியாக வலம் வந்தார் மெலினா. பின்னர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1996-ம் ஆண்டு குடியேறினார். அப்போதுதான் அவருக்கு ட்ரம்ப்புடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், அவர் மாடலிங் தொழிலில் உச்சத்தில் இருந்த 90களில் எடுக்கப்பட்ட நிர்வாண படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. முழு நிர்வாண கோலத்தில் அவரது பல்வேறு புகைப்படங்களையும், இன்னொரு பெண்ணுடன் கட்டியணைத்தபடி கட்டிலில் படுத்திருக்கும் வேறு சில புகைப்படங்களையும் அமெரிக்காவின் பிரபல நாளிதழான 'தி நியூயார்க் போஸ்ட்' வெளியிட்ட பின்னர் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது.
நின்றுபோன பழைய பத்திரிகைக்காக மெலினா போஸ் கொடுத்த இந்தப் புகைப்படங்கள் தனக்கு மெலினியா அறிமுகம் ஆவதற்கு முன்னர் எடுக்கப்பட்டவை என்று டொனால்ட் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். மேலும், மெலினியா, இதுபோல் ஏராளமான பத்திரிகைகளின் அட்டைப்படங்களுக்கு 'போஸ்' கொடுத்திருந்தது தனக்கு முன்னரே தெரியும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications