93 வயதில் மறைந்த 'டிராகுலா'!
லண்டன்: டிராகுலா வேடத்தில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் கிறிஸ்டோபர் லீ லண்டனில் மரணமடைந்தார். அவரது வயது 93.
மிகச் சிறந்த நடிகரான இவர் வில்லனாக புகழ் பெற்றவர். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வந்த தி மேன் வித் தி கோல்டன் கன் படத்தில் ஸ்கேரமங்கா என்ற கேரக்டரில் கலக்கியிருப்பார். அதேபோல தி லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தில் சருமான் என்ற விஸார்ட் கேரக்டரில் பிரமிக்க வைத்திருப்பார்.
லண்டனில் உள்ள செல்சியா வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனையில் ஜூன் 7ம் தேதி மரணமடைந்துள்ளார் லீ. மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
முதலில் தனது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று லீயின் மனைவி விரும்பியதால் உலகுக்கு மரணச் செய்தி தாமதமாக வந்து சேர்ந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக லீயும், அவரது மனைவியும் அருமையான இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராகுலா லீ
இங்கிலாந்தைச் சேர்ந்த லீ, டிராகுலா வேடத்திற்குப் பெயர் போனவர். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திகில் படமா கூப்பிடு லீயை என்று கூறும் அளவுக்கு அதுபோன்ற பாத்திரங்களில் பயமுறுத்தியவர்.

காரிடார் ஆப் மிர்ரர்ஸ்
1947ம் ஆண்டு காரிடார் ஆப் மிர்ரர்ஸ் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் லீ. ஆனால் அப்படம் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. ஆனால் 50களில் திகில் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அவர் புகழ் பெறத் தொடங்கினார்.

ஹேமர் ஹாரர்
குறிப்பாக ஹேமர் நிறுவனத் தயாரிப்புகள்தான் அவருக்கு புகழைத் தேடித் தந்தன. அந்த நிறுவனத்தின் முதல் படமாக வந்த தி கர்ஸ் ஆப் பிரான்கன்ஸ்டீன் படம் அவருக்கு மிகப்ப பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது.

அசத்திய டிராகுலா
டிராகுலா வேடத்தில் பயமுறுத்தியிருப்பார் லீ. பீட்டர் குஷிங் இயக்கிய படம் அது. அப்படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து 20 படங்களில் பணியாற்றினர். அத்தனை படமும் ஹிட்டும் ஆனது.

உமாவுடன் 10
பல திகில் படங்களில் நடித்திருந்தாலும் லீக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த கேரக்டர் டிராகுலா எனப்படும் ரத்தக் காட்டேறிதான். ஹாலிவுட் நடிகை உமா துர்மனுடன் 10 படங்களில் இணைந்து நடித்து புதிய சாதனையும் படைத்தவர் லீ என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு இங்கிலாந்து அரசு இவருக்கு நைட் பட்டம் வழங்கிக் கெளரவித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications