வண்ண வண்ண நிறங்களில் “சாக்லெட் ஆடைகள்” - பாரீசில் அழகிகளின் அசத்தல் சாக்லெட் ஃபேஷன் ஷோ!

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் சாக்லெட் கண்காட்சியை ஒட்டி அழகிகள் சாக்லெட்டுக்களால் ஆன ஆடைகளை அணிந்து வந்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு வகையான சாக்லெட்டுகள் இடம்பெறும்.

Dresses at the Paris chocolate show

இந்த ஆண்டு தொடங்கியுள்ள சாக்லெட் கண்காட்சிக்காக சாக்லெட் ஆடைகளால் ஆன ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதில், முழுக்க முழுக்க சாக்லெட்டுகளால் வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான சாக்லெட் ஆடைகளை மாடல் அழகிகள் அணிந்து ஒய்யார நடை நடந்து வந்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சப்புக் கொட்டி சாப்பிட தூண்டும் ருசியான சாக்லெட் ஆடைகளுடன் மாடல் அழகிகள் வலம் வந்து, பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

21 ஆண்டாக நடைபெறும் இந்த சாக்லெட் கண்காட்சியில், 40 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட சாக்லெட் உற்பத்தியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+