நீங்கள் பீர் பிரியரா? அப்படின்னா தினமும் அரை கிளாஸ் குடிங்க.."ஹார்ட் அட்டாக்"கே வராதாம்!
வாஷிங்டன்: தினசரி கொஞ்சமாக பீர் குடித்தால் மாரடைப்பே வராது என்று அமெரிக்க பல்கலைக்கழகம் கூறியுள்ளது
பீர் என்பது பழமையான மது பானங்களில் ஒன்றாகும். அதுவும் சுமார் 7000 ஆண்டுகளாக உபயோகத்தில் இருக்கும் உலகின் மிகப் பழமையான மது பானம்.
4000 ஆண்டுகள் கிறிஸ்துவிற்கு முன்பாகவே பீர் வழக்கத்தில் இருந்துள்ளதாக அக்காலக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

எகிப்தியர்கள் கண்டுபிடிப்பு:
அக்கால எகிப்தியர்கள் தான் முதலில் மாவுச்சத்துள்ள பொருட்கள் கெட்டுப் போவதால் ஒரு விதமான புளித்த பொருளாக மாறி பருகும் பொழுது போதை தருகின்றது எனக் கண்டுபிடித்தவர்கள்.
கெட்டுப் போன போதைப் பொருட்கள்:
அதே சமயத்தில் உலகின் பல்வேறு நாட்டினராலும் பல விதமான பொருட்கள் கெட்டுப் போவதால் பல விதமான போதைப் பொருட்கள் கிடைக்கின்றது என கண்டறியப்பட்டது.
ஹோம் மேட் "பீர்":
அதன் பின்னர் சுமார் 4000 ஆண்டுகள் பீர் மற்றும் பிற மது பானங்கள் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டு தனி மனிதர்களின் தேவைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்தது. பின்னர் கி.பி 700 ல் ஏற்பட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டன.
மாரடைப்பைத் தடுக்கலாம்:
அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் தலைமையிநடந்த ஆய்வில் தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் கண்டறிந்தனர்.
வருசத்துக்கு 100 லிட்டர்:
உலகின் பல நாடுகளிலும் பீர் உபயோகத்தில் இருந்தாலும் அதிக பீர் குடிக்கும் மக்களைக் கொண்ட நாடு அமெரிக்கா தான். அங்கு ஆண்டொன்றிற்கு சராசரியாக ஒரு மனிதன் 100 லிட்டர் பீர் குடிக்கின்றான்.
மாவுச்சத்தும், ஈஸ்ட்டும்:
பீரில் இருக்கக் கூடிய அடிப்படைப் பொருட்கள், தண்ணீர், மாவுச்சத்து, ஈஸ்ட் போன்றவை தான். இவை புளிப்பதால் ஆல்கஹால் உற்பத்தி ஆகின்றது. சுவை சேர்ப்பதற்காக சில மூலிகைகளும், ஹாப்சும் சேர்க்கப்படுகின்றன.
வாரத்தில் 7 நாட்கள்:
ஆய்வில் அமெரிக்காவில் 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேர், வாரத்தின் 7 நாட்களும் தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர்.
தொடர் ஆய்வு:
தொடக்கத்தில் 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2014 ஆம் ஆண்டிலும் பரிசோதிக்கப்பட்டனர்.
சூப்பர் கண்டுபிடிப்பு:
அவர்களில் டீ குடிப்பவர்களை விட பீர் குடிப்பவர்களில் ஆண்களில் 20 சதவீதம் பேருக்கும், பெண்களில் 16 சதவீத பேருக்கும் குறைவாகவே மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
பிறகென்ன "பீர்"பாலாக மாற வேண்டியதுதானே!
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications