நல்லா "குடிங்க", அப்புறமா சாப்பிடுங்க.. வெயிட் குறைஞ்சிருமாம்!
வாஷிங்டன்: உணவு சாப்பிடும் முன் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இயந்திரங்களின் உதவி பெருகி, உடல் உழைப்பு குறைந்து விட்ட நிலையில், மனிதர்களைப் பெரிதும் பயமுறுத்துகிறது உடல் பருமன். உடற்பயிற்சி, டயட் என உடல் எடையைக் குறைக்க பல்வேறு வகைகளில் மக்கள் போராட வேண்டி இருக்கிறது.
காரணம் உடல்பருமனோடு அழையா விருந்தாளியாக வரும் மற்ற நோய்கள் தான்.

எளிய வழி...
இந்நிலையில், பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஹெலன் பரேட்டி தலைமையில் உடல் எடையைக் குறைப்பதற்கு புதிய எளிய வழி ஒன்றை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வு...
இதற்கான ஆய்வில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் 41 பேர் சாப்பாட்டிற்கு முன் ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்க வைக்கப் பட்டனர். மீதமுள்ள 43 பேர் சாப்பிட்டதற்குப் பின் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப் பட்டனர்.

எடை குறைந்தது...
12 வாரங்கள் இந்த முறை பின்பற்றப் பட்டது. ஆய்வின் முடிவில், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தவர்களின் உடல் எடை 4.3 கிலோ வரை குறைந்து இருந்தது. ஆனால், சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தவர்களுக்கு வெறும் 1.3 கிலோ எடை மட்டுமே குறைந்து இருந்தது தெரிய வந்தது.

ஆய்வு முடிவு...
இதன்மூலம், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை கணிசமாக குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளன்னர்.

தண்ணீர் குடித்தாலே போதும்...
இதுகுறித்து ஆய்வு நிபுணர் ஹெலன் பரேட்டி கூறுகையில், ‘‘உடல் எடையை குறைக்க பலகடுமையான சிகிச்சை முறைகள், உடற்பயிற்சி போன்றவை செய்வதை விட சாப்பிடும் முன்பு தினமும் 3 வேளை தண்ணீர் குடித்தாலே போதும், உடல் எடை தானாக குறைந்து விடும்'' எனத் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications