சாவு பயத்தில் பாக்... எங்க இருந்து அடிக்கிறாங்கன்னே தெரியல! ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் அட்டாக்
இஸ்லாமாபாத்: நம் நாட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது போல் பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று பெஷாவர் ஜல்மி - கராச்சி கிங்ஸ் அணிகளின் போட்டி நடைபெற இருந்த ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த மைதானம் சேதமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் சாவு பயத்தில் பதறிப்போய் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத மையங்களை குறிவைத்து தாக்கியது. இதில் 70க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பாகிஸ்தான் நம் நாட்டை தாக்குவதாக அறிவித்து மீண்டும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் நம் நாட்டின் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்த ஏவுகணை தாக்குதல்களை நம் நாடு வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
இதையடுத்து மீண்டும் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனா தயாரிப்பான எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் பாகிஸ்தானின் லாகூரில் நிறுவப்பட்டு இருந்தது. இதனை இஸ்ரேல் நாட்டின் தயாரிக்கப்பட்ட HAROP ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்களை அடையாளம் கண்டு அழிக்கும் அமைப்பாக செயல்பட்டு வந்த நிலையில் அதனை சோலியை முடித்துள்ளது நம் நாடு. மேலும் இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அதுமட்டுமின்றி நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. அதேபோல் பாகிஸ்தானில் , பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 8 மணிக்கு ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பெஷாவர்
ஜால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டி நடைபெற இருந்தது.
இந்த போட்டிக்கு நடுவே தான் இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் என்பது நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்து வந்த ட்ரோன் மைதானத்தின் ஒருபகுதியாக இருந்த ரெஸ்டாரண்ட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் ராவல்பிண்டி மைதானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த ட்ரோன் தாக்குதலை இன்னும் இந்தியா உறுதி செய்யவில்லை. அதேபோல் பாகிஸ்தான் தரப்பிலும் இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து எந்த அப்டேட்டுகளும் தரப்படவில்லை. முன்னதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சவுத்ரி கூறுகையில், ‛‛லாகூர், குஜ்ரன்வாலா, சக்வாலா, பஹவல்பூர், மியானா, கராச்சி, சோர், ராவல்பிண்டி, மற்றும் அடோக் உள்ளிட்ட இடங்களில் பறந்து வந்த ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன'' என்று கூறியிருந்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications