For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓவர் "மப்பு".. கான்கிரீட் கலவையை அள்ளித் தின்று வயிறு "ஜாம்" ஆகிப் போன சீன 'குடி'மகன்!

By Siva
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் குடிபோதையில் குடியிருப்புக் கட்டிடம் அருகே ஒரு பக்கெட்டில் இருந்த கான்கிரீட் கலவையை உணவு என்று நினைத்து சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஒருவர்.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த ஒருவர் இரவு முழுவதும் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். பார்ட்டியில் மூக்கு முட்ட மது அருந்திய அவர் போதையில் வீட்டுக்கு கிளம்பியுள்ளார். வீட்டுக்கு கிளம்பிய அவர் குடியிருப்பு கட்டிடம் வழியாக சென்றுள்ளார்.

Drunk Chinese man eats concrete thinking it’s food

பசியில் இருந்த அவர் கண்ணில் குடியிருப்பு கட்டிடம் அருகே ஒரு பக்கெட்டில் இருந்த கான்கிரீட் கலவை தென்பட்டது. அவர் அதை உணவு என்று நினைத்து சாப்பிடத் துவங்கினார். பசியில் அவர் 250 கிராம் கான்கிரீட் கலவையை சாப்பிட்டுவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது வயிற்றில் இருந்த கான்கிரீட் கலவையை மருத்துவர்கள் அகற்றினர்.

சரியான நேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் முழுமையாக குணமடைந்துவிடுவார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
A drunk man has eaten 250 gram of concrete thinking it as food in Nanjing, Jiansu Provice of China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X