டிராபிக் விதிகளை மீறாத 2 பேருக்கு புத்தம் புதிய கார்களை பரிசளித்த துபாய் போலீஸ்
துபாய்: கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிய இருவருக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக அளித்து பாராட்டியுள்ளது துபாய் போலீஸ்.
போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு புத்தம் புதிய காரை பரிசாக அளிக்கும் ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் என்ற திட்டத்தை துபாய் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனம் ஓட்டியவர்களின் பெயர்கள் ஒரு பெட்டிக்குள் போட்டு குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
صور: سمو الشيخ منصور بن محمد بن راشد آل مكتوم أثناء عملية السحب والإعلان عن الفائزين في نظام النقاط البيضاء. pic.twitter.com/tF0l1RPUwr
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) April 20, 2015 தேர்வு செய்யப்படும் நபருக்கு போலீசார் புத்தம் புதிய காரை பரிசளித்து பாராட்டுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது. இந்த ஆண்டு குலுக்கலில் இரண்டு பேரின் பெயர்களை தேர்வு செய்தார் மன்னர் ஷேக் மன்சூர் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம்.
தேர்வு செய்யப்பட்ட லைலா அல் பலூஷி மற்றும் ஆத்திக் முபாரக் ஆகியோருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் இருந்த 1, 500 பேருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்பட்டது.
இந்த ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் மூலம் விபத்துகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சி குறித்த புகைப்படத்தை துபாய் போலீசார் தங்களின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications