துபாயில் உடல் எடையை குறைத்து தங்கம் வென்ற இந்தியர்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் நடைபெற்ற உடல் எடையைக் குறைக்கும் போட்டியில் பங்கேற்று பரிசாக தங்கம் வென்றுள்ளார் இந்தியர் ஒருவர்.

உடல் எடையை குறைக்கும் போட்டியை துபாய் நகர சபை நடத்தியது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும் என அறிவித்து இருந்தது. அதை தொடர்ந்து உடல் எடையை குறைக்கும் போட்டியில் பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்றவர்களில் அகமது இப்ராகீம் அல் ஷேக் (27), என்பவர் முதல் பரிசு பெற்றார். இவர் சிரியாவை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஆவார். இவர் 146.7 கிலோவாக இருந்தார். தனது உடல் எடையில் 26 கிலோ குறைத்தார். இதற்காக அவருக்கு 63 கிராம் தங்கம் பரிசளிக்கப்பட்டது.

அவரை தொடர்ந்து ரகுநாத் பாலசுப்பிரமணியன் என்பவர் 2-வது இடம் பிடித்தார். 126 கிலோ எடையுடன் இருந்த அவர் 23 கிலோ எடையை குறைத்துள்ளார் இவர் இந்தியராவார்.

இவர்கள் உள்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துபாய் நகரசபை தங்கம் பரிசாக வழங்கியுள்ளது. துபாயில் உடல் எடையோடு, ஓபிசிட்டியோடும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். குண்டானவர்களை ஒல்லியாக்கும் முயற்சியாகவே இந்த போட்டி நடத்தப்பட்டதாக துபாய் நகரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். உடல் எடை குறைக்கும் போட்டியில் வென்றவர்களுக்கு மொத்தம் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+