கேட் மிடில்டன் மீண்டும் கர்ப்பம்: குட்டி இளவரசி வேண்டுமாம்!
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று கென்சிங்டன் அரண்மனை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலியான கேட் மிடில்டனை கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி லண்டனில் மணந்தார். இதையடுத்து கர்ப்பமான கேட் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி இளவரசர் ஜார்ஜை பெற்றெடுத்தார். வில்லியம் தனது மனைவி, மகனுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இடத்தில் இரண்டாவது குழந்தை பற்றி சூசமாக தெரிவித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் கென்சிங்டன் அரண்மனை இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேட்
இளவரசி கேட் மிடில்டன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்ற நல்ல செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அரண்மனை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2வது குழந்தை
இளவரசர் ஜார்ஜுக்கு தம்பியோ, தங்கச்சி பாப்பாவோ அடுத்த ஆண்டு பிறக்கும். கேட் கர்ப்பமாக இருப்பது குறித்து இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்ளிட்ட ராஜ குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காமரூன்
இளவரசர் மற்றும் இளவரசிக்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் இரண்டாவது முறை பெற்றோராகப் போவதில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளதேன் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தை
தற்போது பிறக்கும் போகும் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்று வில்லியம் மற்றும் கேட் விரும்புகிறார்களாம்.












Click it and Unblock the Notifications