கால்பந்தாட்ட வீரர்களை போல பெட்ரூமில் நடிக்காதீர்கள்- ஆண்களை உசுப்பேற்றும் ஆணுறை விளம்பரம்
லண்டன்: கால்பந்தாட்ட வீரர்களை போல, படாமலே பட்டுவிட்டது போல, ஓவர் ஆக்டிங் கொடுக்காதீர்கள், ஒழுங்காக துணையை திருப்தி செய்யுங்கள் என்ற நக்கலுடன் வெளியாகியுள்ள ஆணுறை விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடப்பதால், தற்போது உலகமெங்கும் கால்பந்தாட்ட ஜுரம்தான் தொற்றிக்கொண்டுள்ளது. இதை டுரெக்ஸ் ஆணுறை தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சீசனுக்கு தக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மிதமிஞ்சிய நடிப்பு
அதில், கால்பந்தாட்ட வீரர்கள் பந்தை விரட்டி செல்வதை போலவும், எதிரணி வீரர்கள் தங்கள் மீது மோதாமலேயே மோதிவிட்டது போல ஓவர் ஆக்டிங் கொடுத்து தரையில் படுத்து புரள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெனால்டி கிக் கிடைக்குமா?
கால்பந்தாட்ட போட்டிகளின்போது எதிரணி வீரர்கள் வேண்டுமென்றே மற்ற அணி வீரரை தாக்கினால், அதற்கு தண்டனையாக பெனால்டி கிக் கொடுக்கப்படும். பெனால்டி கிக்கில் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளான அணி எளிதில் கோல் போட்டுவிடும். இதற்காகவே பல வீரர்களும் சும்மா உரசினாலும், உயிர்போகிற வலி வந்துவிட்டதைபோல நடிப்பது வழக்கம்.

ஒரே கல்லில் இரு மாங்காய்
கால்பந்தாட்ட வீரர்களின் நடிப்பை கிண்டல் செய்யும் சாக்கில் மற்றொரு உட்கருத்தையும் உள்ளே வைத்துள்ளது இந்த ஆணுறை விளம்பரம். இதன் மூலம் ஒரே நேரத்தில் இரு மாங்காய் அடிக்கும் டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளது டுரெக்ஸ்.

ஆண்களுக்கு மெசேஜ்
இந்த விளம்பர காட்சியின் இறுதியில், இதேபோல பொய்யாக ஏமாற்றாதீர்கள் என கணவன்மார்களுக்கு ஒரு மெசேஜ் தகவல் இடம்பெற்றுள்ளது. கணவன்மார்கள் எப்படி மனைவிகளை ஏமாற்ற முடியும்? அதற்கும் இந்த விளம்பரத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம்.

உண்மையான திருப்திக்கு..
'துணையுடன் உடலுறவு கொள்ளும் கணவன், மற்றும் மனைவி இருவரும் பெரும்பாலும், தங்களுக்கு பரம திருப்தி ஏற்பட்டுவிட்டதை போல பொய்யாகத்தான் நாடகமாடுகிறார்கள், உண்மையான திருப்திக்கு டுரெக்ஸ் ஆணுறைகள் உதவும்' என்பதுதான் இதன் உட்பொருள்.

புட்பாலும், செக்சும்..
சீசனுக்கு ஏற்றபடி கால்பந்தாட்டமும் இதற்கு ஒத்துப்போயுள்ளது. உலகமெங்கும் இந்த விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்க்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கால்பந்தாட்டமும், செக்சும்தான் உலக அளவில் இணைப்பு பாலமாக இருப்பதை டுரெக்ஸ் நன்கு புரிந்து வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications