கேமராவைத் திருடிய கழுகு 110 கிமீ படம் பிடித்தபடி பறந்த வினோதம்...
சிட்னி: முதலைகளைக் கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய கேமராவை தூக்கிச் சென்ற கழுகு ஒன்று, அதனை சுமார் 110கிமீ தூரம் தள்ளி கீழே போட்டுச் சென்ற வேடிக்கைச் சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
பொதுவாக வானில் வட்டமிடும் கழுகைத் தான் சிலர் வீடியோ எடுப்பார்கள், ஆனால் அந்த கழுகே வீடியோகிராபராக மாறி வீடியோ எடுத்த வினோதம் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் முதலைகளைக் கண்காணிப்பதற்காக வைக்கப் பட்ட கேமராவைத் தூக்கிச் சென்று தான் தனது ஒளிப்பதிவு திறமையைக் காட்டியுள்ளது அந்தக் கழுகு.

முதலைகளைக் கண்ண்காணிக்க....
ஆஸ்திரேலியாவில் மார்க்கரெட் ஆற்று பகுதியில் முதலைகளை கணக்கிடுவதற்காக சென்சார் பொருத்தப்பட்ட கேமராவை வைத்திருந்தனர் வன ஆர்வலர்கள். சுமார் 10 முதல் 15 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் கொண்ட இந்தக் கேமரா, நீரில் விழுந்தாலும் பாதிக்காமல் இயங்க கூடிய திறனைப் பெற்றது.

மாயமான கேமரா...
இந்நிலையில், திடீரென சில தினங்களுக்கு முன்னர் அந்தக் கேமரா மாயமானது. கேமரவைத் தேடும் பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் சுமார் 110கிமீ தாண்டி கேமரா கிடப்பதைக் கண்டறிந்தனர்.

பதிவான காட்சிகள்...
வனப்பகுதிக்குள் மேரி ஆற்றின் அருகே கிடந்த அந்த கேமராவை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றில் காட்சிகள் பதிவாகியிருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது, கேமராவை கழுகு ஒன்று தூக்கிச் சென்றது தெரிய வந்தது.

தூக்கிச் சென்ற கழுகு....
இந்த வினோதச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி ரோனெய்ல் ஸ்கீன் கூறியதாவது,'கேமரா திருடு போனது குறித்து ஆய்வு நடத்தினோம். அதன்பின் 110 கி.மீ. தொலைவில் மேரி ஆற்றின் அருகே கிடந்த கேமராவை கண்டுபிடித்தோம். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போதுதான் கழுகு தூக்கி சென்றது தெரிந்தது' எனத் தெரிவித்துள்ளார்.

வீடியோகிராபர்...
கழுகு எவ்வாறு, எதற்காக கேமராவைத் தூக்கிச் சென்றது எனத் தெரியவில்லை. ஆனால், கழுகிடம் சிக்கிய கேமரா செயலிழக்காமல், தன் பணியினைச் செவ்வனே செய்துள்ளது. ஆம், கேமராவில் கழுகு பயணம் செய்த 110 கி.மீ. தூரமும், காட்சிகளாக பதிவாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications