ரஷ்ய அதிபர் தேர்தல்.. 88% வாக்குகளை அள்ளிய புதின்.. 5ஆவது முறையாக மீண்டும் அதிபராக தேர்வு!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருப்பது ரஷ்யா.. இந்தியாவை விட பல மடங்கு பெரியதாக ரஷ்யா இருந்தாலும் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 15 கோடி தான். அங்கே ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேர்தல் நடக்கும்.

Early results show Mega victory for Putin in Russia presidential election

இந்தியாவைப் போல இல்லாமல் அங்கே அதிபர் ஆட்சி முறை தான் இருக்கிறது. இந்த ரஷ்யாவில் சர்வ வல்லமை பெற்ற தலைவராக இருப்பவர் புதின். இவர் கடந்த 1999 முதல் அங்கே அசைக்கவே முடியாத தலைவராக இருக்கிறார்.

புதின் வெற்றி: இதற்கிடையே அங்கே புதிய அதிபரை தேர்வு செய்ய அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்றதாக முதற்கட்ட தேர்தல் முடிவுகளில் தெரிய வருகிறது. இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகி இருக்கிறது. அங்கே பதிவான வாக்குகளில் 87.8% வாக்குகள் புதினுக்கு வந்ததாக கூறப்படுகிறது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுவாகும்.

1999இல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை புதின் ஓவர்கேட் செய்துள்ளார். உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புதின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

மேற்குலக நாடுகள்: அதேநேரம் ரஷ்யாவில் நடக்கும் தேர்தலை மேற்குலக நாடுகள் எப்போதும் விமர்சித்தே வருவார்கள். அதாவது அங்குள்ள எதிர்க்கட்சிகள் யாரையும் போட்டியிட அனுமதிக்க மாட்டார்களாம். வேறுமன பெயரளவில் சில கட்சிகளை மட்டும் போட்டியிட அனுமதிக்கிறார்கள் எனப் புகார் இருக்கும். இந்த முறையும் கூட புதினை வலிமையாக எதிர்க்கும் அளவுக்கு எந்தவொரு வேட்பாளரும் களத்தில் இல்லை என்பதே உண்மை.

ரஷ்யாவை பொறுத்தவரை அங்கே ஒரே நபரால் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபரா இருக்க முடியாது என்ற விதி இருந்தது. இதன் காரணமாகவே 1999இல் பதவிக்கு வந்த புதின் 2008இல் அதிபர் பதவியைத் தனது நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு முறை மட்டும் பிரதமராக இருந்தார். அதன் பிறகு மீண்டும் 2012இல் அதிபரான அவர், இந்தச் சட்டத்தை மாற்றினார்.

விதியை மாற்றினார்: அதாவது ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து அதிபராக இருக்கலாம் என்று விதியை மாற்றினார். மேலும், அதிபரின் பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புதின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. புதின் சாகும் வரை ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாக அப்போதே பலரும் புதின் சாகும் வரை அதிபர் பதவியில் இருக்கத் திட்டமிட்டே இதைச் செய்துள்ளதாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+