பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 என பதிவு! மக்கள் அச்சம்
பனாமா: பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியா உள்பட பல நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான நிலநடுக்கங்கள் சேதம், உயிர்பலியை ஏற்படுத்துவது இல்லை. இந்நிலையில் தான் கரீபியன் கடலில் நேற்று இரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதாவது பனாமா-கொலம்பியா எல்லையின் அருகே உள்ள கரீபியன் கடலில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம், ‛‛பனாமா-கொலம்பியா எல்லையில் கரிபீயன் கடலில் 6.6 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.'' என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் பனாமாவின் போர்டோ ஒபால்டியாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக காயம் அல்லது சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. இருப்பினும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications