இந்தோனேசியாவில் 7.9 ரிக்டரில் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ்:இந்தியாவுக்கும் நிம்மதி
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் சுமத்ராவுக்கு தென்மேற்கே இன்று மாலை 6.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்த கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமத்ரா பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவை இந்த சுனாமி அலைகள் தற்போதைய நிலையில் உடனே தாக்க வாய்ப்பில்லை என்று ஹைதராபாத் சுனாமி முன்னெச்சரிக்கை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு விட்டதால் இந்தியாவுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்தோனேசியாவின் படாங்கில் இருந்து 808 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுக்கோலில் 7.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுமத்ராவை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications