Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்.. திடீரென குலுங்கிய பூமி.. நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.9 என பதிவு!

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவில் இன்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

துருக்கி, சிரியா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் கடந்த மாதம் 6 ம் தேதி துருக்கியின் காசியான்டெப் நகரில் தொடர்ந்து 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் துருக்கி, சிரியா ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

Earthquake of 6.9 in richter jolts at kermadec Islands in Newzealand

இருநாடுகளிலும் பல ஆயிரம் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் விழுந்தன. பல ஆயிரம் பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின.

துருக்கி, சிரியா நாட்டு மக்கள், ராணுவத்துடன் சேர்ந்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 75க்கும் அதிகமான நாட்டை சேர்ந்தவர்கள் இணைந்து மக்களை மீட்டனர். இருப்பினும் இருநாடுகளிலும் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்பது 50 ஆயிரத்தை கடந்தது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி, சிரியாவை தொடர்ந்து நாட்டின் பல இடங்களிலும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மலைப்பகுதியையொட்டி மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் உள்ளன. இந்நிலையில் இன்று கெர்மடெக் தீவு பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் 6.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 152 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் சேத பாதிப்பு பற்றிய எந்த விபரமும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+