For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்

Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

படாங் நகரிலிருந்து மேற்காக 114 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், கடலுக்கடியில் 23 மைல் ஆழத்தில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Earthquake strikes off Indonesia island; no reports of damage

இந்த பூகம்பத்தால் உயிரிழப்பு அல்லது சேதாரம் எதுவும் ஏற்பட்டதா என்று எந்த விவரமும் இது வரை தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
An earthquake measuring 6.4 magnitude struck off the Indonesian island of Sumatra today, the U.S. Geological Survey said, but there were no reports of damage or casualties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X