பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கம்! இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்கள் அதிர்ந்தன!!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் அந்நாட்டின் பல நகரங்கள் அதிர்ந்தன. 30 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மையமாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 43.4 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி உள்ளிட்ட பல நகரங்கள் அதிர்ந்தன. இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. இது மொத்தம் 30 வினாடிகளே நீடித்தது.
வீடுகளும் கட்டிடங்களும் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதுவரை சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications