பூமிக்கு அடியில் "இதய" துடிப்பு.. இரண்டாக பிளக்கும் ஆப்பிரிக்கா! உருவாகும் புதிய மெகா கடல்
சவுத்தாம்ப்டன்: இந்தப் பூமியில் தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதை ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வும் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் சைலண்டாக ஒரு முக்கியமான மாற்றம் நடக்கிறதாம். இது கிட்டதட்ட இதயத்தின் துடிப்பைப் போல இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பூமியில் புதிதாக ஒரு கடன் உருவாகும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
இந்த உலகில் சைலண்டாக பல்வேறு மாற்றங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன. சிறு மாற்றங்கள் கூட பூமியின் செயல்பாட்டையே மாற்றுவதாகவே இருக்கிறது. இதனால் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இதன் காரணமாகவே உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இதயத் துடிப்பு
இதற்கிடையே தெற்கு ஆப்பிரிக்காவில் பூமிக்குக் கீழே அசாதாரணமான நிகழ்வு நடந்து வருவதாக சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் ஒரு வித அதிர்வுகள் ஏற்படுகிறதாம். இது கிட்டதட்ட இதயத்தின் துடிப்பைப் போலவே ஏற்படுவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். உருகிய மாக்மா பூமியின் மேலோட்டை கீழே இருந்து தாக்குவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இது படிப்படியாகக் கண்டத்தைக் கிழித்து, ஒரு புதிய கடலை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
அஃபார் பிராந்தியம் மற்றும் மெயின் எத்தியோப்பியன் ரிஃப்ட் முழுவதும் இருந்து 130க்கும் மேற்பட்ட எரிமலை பாறை மாதிரிகளைச் சேகரித்த ஆய்வாளர்கள், அதை மற்ற தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதில் தான் இப்படி ஆப்பிரிக்காவுக்குக் கீழ் மிகப் பெரிய மாற்றம் நடந்து வருவது தெரிய வந்துள்ளது.
தனித்துவமான இதயத் துடிப்பு
இது குறித்து சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகப் புவி அறிவியல் பேராசிரியரும், ஆய்வின் இணை ஆசிரியருமான டாம் ஜெர்னான் கூறுகையில், "இங்குள்ள கெமிக்கல்களை பார்க்கும்போது, அது இதயத் துடிப்பைப் போலத் துடிப்பது தெளிவாகத் தெரிகிறது.. இந்தத் துடிப்புகள் எவ்வளவு தடிமனாக இருக்கிறதோ.. எவ்வளவு வேகமாக அவை பிரிகிறதோ அதைப் பொறுத்து மாறுபடும் என்றே தெரிகிறது" என்றார்.
மற்றொரு ஆய்வாளர் டாக்டர் எம்மா வாட்ஸ் கூறுகையில், "அஃபார் பிராந்தியத்தின் கீழிருக்கும் கவசம் நிலையானதாகவோ அல்லது சீரானதாகவோ இல்லை என்பதைக் கண்டறிந்தோம்.. அது துடிக்கிறது, மேலும் இந்தத் துடிப்புகள் தனித்துவமான வேதியியல் சிக்னேச்சர்களை கொண்டு இருக்கிறது. பூமியின் உட்புறத்திற்கும் அதன் மேற்பரப்பிற்கும் இடையிலான தொடர்பைக் குறித்து நாம் தெரிந்து கொள்ள இது முக்கியமானதாக இருக்கும்" என்றார்.
புதிய கடல்
இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் நேச்சர் ஜியோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் டெக்டோனிக் தட்டுகள் ஆழமான மெண்டில் மேல்நோக்கிப் பாய்வதை எவ்வாறு பாதிக்கின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது.. இப்படிக் கண்டம் பிளவுபடுவதால் ஒரு புதிய கடல் படுகை உருவாகும். அதேநேரம் இந்தப் பிளவு உடனடியாக ஏற்படாது. இவை மெல்ல மெல்ல ஏற்படும். இதனால் பல மில்லியன் ஆண்டுகளில் பிளவு முழுமையடைந்து கடற்பரப்பு விரிவடையும்.
தொடரும் ஆய்வுகள்
சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் டெரெக் கெய்ர் மேலும் கூறுகையில், "இந்த மெண்டில் மேலே வருவதற்கும் பூமியின் பிளேட்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எரிமலை வெடிப்பு, பூகம்பம் மற்றும் கண்டம் உடையும் செயல்முறையைப் புரிந்து கொள்ள இது உதவும்" என்றார். இப்போது ஆய்வாளர்கள் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications