பேரழிவின் தொடக்கம்? புரட்டிப் போட்ட வெள்ளம்.. லிபியாவில் 2000 பேர் பலி! பல ஆயிரம் பேர் மாயம்
திரிபோலி: லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பின் அடிப்படையில் 4ஆவது மிகப் பெரிய நாடாக இருந்தாலும் கூட.. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு.. அங்கே வெறும் 67.4 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.

இதற்கிடையே இந்த லிபியாவில் இப்போது மிக பெரியளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லிபியாவின் கிழக்கு பகுதிகளை இந்த கடும் புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால் டெர்னா நகரில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம்: இந்த வெள்ளத்தில் குறைந்தது 2,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணிகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாகக் கிழக்கு லிபியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் லிபிய தேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் மிஸ்மாரி கூறுகையில், "டெர்னா நகரம் பேரழிவைச் சந்தித்துள்ளது.. அங்குள்ள அணைகள் இடிந்த நிலையில், அங்குப் பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தால் 5,000-6,000 பேர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களைத் தேடும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
பாதிப்பு: கிழக்கு லிபியாவில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அங்கே எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து துல்லியமான தகவல்கள் அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு மக மோசமாக இருக்கும் நிலையில், சர்வதேச நாடுகளின் உதவியை லிபியா கோரியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "டெர்னாவில் நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது. அங்கே பல வீடுகள் அப்படியே சரிந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் அணை உடைந்ததாகவே தெரிகிறது. இரவு தூங்கிய போது கனமழை மட்டுமே இருந்தது. ஆனால், காலை எழுந்து பார்க்கும் போது வீடு முழுக்க தண்ணீரால் சூழப்பட்டு இருந்தது. வீடுகளை விட்டு வெளியே வரவே கடும் சிரமம் இருந்தது. பல இடங்களில் 10 மீட்டர் வரை நீர் இருந்தது" என்றார்.
மோசம்: டெர்னாவின் மேற்கில் பாதிப்புகள் ரொம்பவே மோசமாக இருக்கிறது. அங்குக் கட்டிடங்கள் அனைத்தும் நீரால் சூழ்ந்துள்ளது. யுனெஸ்கோவின் பட்டியலிடப்பட்ட தளமான சைரீன் இருக்கும் சூஸ் மற்றும் ஷாஹத் நகரங்களிலும் பாதிப்பு மிக மிக மோசமாக இருக்கிறது. பாதிப்பு மிக மோசமாக இருக்கும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் மூன்று நாட்கள் துக்கத்தை அறிவித்துள்ளது.
லிபியாவில் உள்ள நான்கு முக்கிய எண்ணெய் எடுக்கும் பகுதிகளான ராஸ் லானூஃப், ஜூயிடினா, பிரேகா மற்றும் எஸ் சித்ரா ஆகியவை கனமழையால் சனிக்கிழமை மாலை மூடப்பட்டே இருக்கிறது. பாதிப்புகள் மோசமாக இருக்கும் நிலையில், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications