நீல நிற உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் ஓடிடுமாம்...!
வாஷிங்டன்: பிரெஞ்சு மொழியில் "வைட்டிலோட்" என்று அழைக்கப்படும் நீல நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை குணப்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் நி்ரூபித்துள்ளனர்.
இந்த வகை உருளைக்கிழங்குகள் வேக வைத்த பின்னர் நீல நிறமாக மாறும் குணமுடையது. பிரான்சில் முதன்முதலில் விளைவிக்கப்பட்டவை.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஹெர்ஷ்லே புற்றுநோய் நிலையம் மேற்கொண்ட ஆய்வில் ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கவல்லது என நிரூபணமாகியுள்ளது.

சோதனையில் நிரூபணம்:
இந்த ஆய்வில் வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்கின் மூலம் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலியின் மீது சோதனையின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

தினமும் ஒன்று சாப்பிடுங்க:
ஒரு நாளில் நடுத்தர அளவில் உள்ள இந்த உருளைக்கிழங்கை மதியமும், இரவும் எடுத்துக் கொள்வதன் மூலமோ அல்லது பெரிய உருளைக்கிழங்கு ஒன்றை நோய் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணுவதன் மூலமாக அவர்களுக்கு இந்த புற்றுநோய் குணமாகும் என ஆய்வில் தலைமை வகித்த ஜெய்ராம் கே.பி. வனமாலா தெரிவித்தார்.

புற்றுநோய் செல்கள் அழியும்:
இவ்வகை உருளையில் உள்ள ஆந்தோசியானின்ஸ், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை இந்தப் புற்றுநோய் செல்களை வேருடன் அழிக்கும் காரணியாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். மேலும், பியூட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கூட்டுவதன் மூலம், நாள்பட்ட அழற்சியைக் சுருக்கி, புற்றுநோய் செல்களை அழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுவே போதும் குணமாக்க:
எனவே, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோயைத் தடுக்க இந்த உருளைக்கிழங்கை உட்கொண்டாலே போதும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications