எபோலா நோய் தாக்குதல்: கினியாவில் 121 பேர் மரணம்
கினியா: கினியா நாட்டில் எபோலா என்ற ரத்த சோகை நோய்க் காய்ச்சலுக்கு இதுவரை 121 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய கணக்கீடு தெரிவித்துள்ளது
கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் முதன் முதலிலும் பின்னர் லைபீரியாவிலும் ட எபோலா என்ற ரத்த சோகை நோய்க் காய்ச்சல் கண்டறியப்பட்டது.
பொதுவாக மத்திய, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் இந்த நோய்த்தாக்கம் முதன்முறையாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவத் தொடங்கியிருப்பது அங்குள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முறையான சிகிச்சைகளோ, தடுப்பூசியோ இல்லாத இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க நோய் தாக்கியவர்களுடன் பழகும் வாய்ப்புள்ள அனைவரையும் சுகாதார ஊழியர்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர். கினியாவில் இதுவரை 121 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய கணக்கீடு தெரிவித்துள்ளது
கினியாவின் அண்டை நாடான மாலியில் சந்தேகிக்கப்பட்ட பத்து வழக்குகளின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக அமெரிக்காவிற்கும், செனகலுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால் அவை எதிர்மறையான முடிவுகளையே தெரிவித்துள்ளதாக மாலியின் சுகாதாரத்துறை அமைச்சர் அவுஸ்மனே கோன் று தெரிவித்துள்ளார்.
தற்போது ஐ.நாவின் சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ள சந்தேகத்திற்குரிய அல்லது உறுதி செய்யப்பட்ட 200 எபோலா நோயாளிகளில் பெரும்பான்மையானோர் கினியாவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பரவியுள்ள இந்த நோயின் தாக்கம் குறைவதற்குப் பல மாதங்கள் பிடிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications