உன்னையெல்லாம் பெத்தாங்களா.. இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா.. அம்மாவையே மெர்சலாக்கிய குட்டி சிங்கம்
குட்டி சிங்கம் ஒன்று தன் தாயை பயமுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
எடின்பர்க்: ஸ்காட்லாந்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் சிங்கக்குட்டி ஒன்று தனது தாயை பயமுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
'நான் சிங்கம்டா’ என ஹீரோக்கள் படங்களில் டயலாக் பேசுவதைப் பார்த்திருப்போம். காட்டுக்கே ராஜா என்பதாலோ என்னவோ சிங்கங்கள் யாருக்கும், எதற்கும் பயப்படாது என்ற பிம்பம் நம் மனதில் உள்ளது. ஆனால் அது நிஜமல்ல என ஒரு சிங்கக்குட்டி நிரூபித்து விட்டது.

ஸ்காட்லாந்து நாட்டின் ஈடின்பர்க் நகரில் இயங்கி வருகிறது சம்பந்தப்பட்ட குட்டிச்சிங்கம் இருக்கும் உயிரியல் பூங்கா. இதில் ஏகப்பட்ட விலங்குகள், சுற்றுலாப் பயணிகளின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்கா நிர்வாகிகள் சமீபத்தில் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் ஒரு கூண்டில் ஒரு அம்மா சிங்கமும், இரண்டு குட்டிச்சிங்கங்களும் அமர்ந்திருக்கின்றன. ஒரு குட்டிச்சிங்கம் தாய்க்கு முன்பு அமைதியாக உலா வருகிறது.
மற்றொரு குறும்புக்கார குட்டிச்சிங்கம், தாய் சிங்கத்தின் பின்பக்கத்தில் பூனை மாதிரி அமைதியாக நடந்து வந்து, அம்மாவை அதிரடியாக தாக்கி பயமுறுத்துகிறது. இதனால் பதறிப்போகும் தாய் சிங்கம், அதிர்ந்து போய் எழுகிறது. பின்னர் 'அடக் கொய்யாக்கா நீ தானா' என தனது குட்டியை பார்த்து ஆசுவாசமடைகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏகப்பட்ட பேர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர். மேலும், குட்டிச்சிங்கத்தின் செயலை பார்த்து பார்த்து சிலாகிக்கின்றனர்.
பயமுறுத்திய குட்டி மட்டுமல்ல, அந்த மூன்று சிங்கக்குட்டிகளுமே சேட்டை பிடித்த சிங்கக்குட்டிகள் தானாம். தினமும் அவைகள் அடிக்கும் லூட்டி கொஞ்ஸம் நஞ்சமல்ல என்கிறார்கள் அங்கிருக்கும் பாதுகாவலர்கள்.
இவர்கள் தினமும் அடிக்கும் லூட்டி கூண்டில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பாவம் அந்த அம்மா சிங்கம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications