அட, அமைச்சர் செங்கோட்டையனா இது?
Subscribe to Oneindia Tamil
லண்டன்: சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் லண்டன் சென்றார். அவருடன் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவும் சென்றுள்ளார்.
லண்டன் சென்ற செங்கோட்டையன் அங்குள்ள கலாச்சாரம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப சூட்-கோட் அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். கழுத்தில் டை கட்டி, காலில் ஷூ அணிந்தபடி இருக்கையில் ஸ்டைலாக அமர்ந்துள்ளார் செங்கோட்டையன்.

எப்போதும் அதிமுக கரை வேட்டியும், வெள்ளை சட்டையுமாக பார்த்து பழக்கப்பட்ட செங்கோட்டையனை புது கெட்அப்பில் பார்த்த நெட்டிசன்கள் குதுகலம் அடைந்துள்ளனர்.
செங்கோட்டையனின் அந்த போட்டோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. லண்டன், பயணம் முடிந்த பின்னர் வரும் 25ம் தேதி செங்கோட்டையன் சென்னை திரும்புவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications