இந்தியா மீது நம்பிக்கை இல்லையாம்.. அமெரிக்கா தலையீடு தேவையாம்.. ஈழத் தமிழர்கள் பகீர் நிலைப்பாடு
அமெரிக்காவின் தலையீடுதான் பிரச்சனைக்கு தீர்வு தரும் என்கின்றனராம் ஈழத் தமிழர்கள்.
வவுனியா: ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வை இந்தியா பெற்றுத் தராதாம்; ஆகையால் அமெரிக்காவின் தலையீட்டுக்காக பிரார்த்தனை செய்வோம் என வவுனியாவில் 2200 நாட்களாகப் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நிலைமை என்ன? என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை தொடர்பாக உரிய விசாரணை கோரி 2,200 நாட்களாக வவுனியாவில் தமிழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் போது நேற்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கூறியதாக ஈழத் தமிழ் ஊடகங்களில் வெளியான செய்தி: ஈழத் தமிழர்களுக்கு சிங்களவரிடம் இருந்து இந்தியா எந்த நீதியையும் பெற்றுத் தராது. இந்தியா நீதியைப் பெற்றுத் தரும் என்கிற நம்பிக்கை இனியும் வேண்டாம். தமிழர் நன்மைக்காக இந்தியா எதனையும் செய்யாது.
உக்ரைன் மீதான கொடூர போரை இந்தியா கண்டிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பில் நடுநிலையான போக்கை இந்தியா வெளிப்படுத்தி இருக்கிறது. இனி நமது உரிமைக்காக, தமிழர் உரிமைக்காக அமெரிக்காவின் தலையீட்டை கோருவோம். அதற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.
1984-ம் ஆண்டே அமெரிக்கா, தமிழருக்கான தன்னாட்சி தாயகம் என்ற கோட்பாட்டை ஆதரித்தது. ஆகையால் ஈழத் தமிழர் இறையாண்மை மீட்புக்கு அமெரிக்காதான் இனி உதவ வேண்டும். அமெரிக்காவின் உதவியைத்தான் இனி ஈழத் தமிழர்கள் பெற்றாக வேண்டும். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவை தந்தையர் நாடாகவே கருதி வருகின்றனர். பொதுவாக ஈழத் தமிழர்கள் இந்தியாவை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அண்மைக்கால அரசியல் போக்குகள், சர்வதேச ஒழுங்குகள் ஈழத் தமிழர்களிடையே சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக தலிபான்கள் 2.0-க்கு அமெரிக்காவின் ஆதரவானது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர்.
தலிபான்களை பயங்கரவாதிகளாக ஒடுக்கிய அமெரிக்காதான், தலிபான்கள் தலைமையிலான புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை ஆதரிக்கிறது; சர்வதேச சமூகமும் அங்கீகரிக்கிறது. அதே போன்ற ஒருநிலைப்பாடுதான் ஈழத் தமிழர் பிரச்சனையிலும் அமெரிக்கா எடுக்க வேண்டும் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் அமெரிக்காவின் தலையீட்டை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications