"18+ மட்டுமே".. பிரமீடு முன்பு.. எகிப்து ராணி போல.. கவர்ச்சி டிரஸ்ஸில் அழகியின் போஸ்!
எகிப்து மாடல் அழகி கைதானார்
கெய்ரோ: எகிப்து ராணி போல மாதிரி டிரஸ் அணிந்து கொண்டு, பிரமீடுகளுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் தந்து போட்டோ எடுத்துள்ளார் ஒரு மாடல் அழகி.. இப்போது கைதாகி உள்ளே இருக்கிறார்.
எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணின் பெயர் சல்மா எல்ஷிமி... இவர் ஒரு மாடல் அழகி.. 26 வயதாகிறது.. சில தினங்களுக்கு முன்பு இவர் பிரமிடுகளுக்கு முன்பு ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்த பிரமிடுகள் என்பது கிட்டத்தட்ட 4700 வருஷம் பழமை வாய்ந்தது.. அங்கு எகிப்து ராணி போல டிரஸ் செய்து கொண்டு, விதவிதமாக போஸ்களை தந்து, போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.. பிறகு அந்த போட்டோக்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிடவும், கையோடு அவர் கைது செய்யப்பட்டும்விட்டார்.
இப்போதைக்கு எகிப்து தலைநகர் கெய்ரோவில் அவரை வைத்திருக்கிறார்களாம்.. இவரை கைது செய்ததற்கு காரணம், இந்த நாட்டின் சட்டப்படி, இதுபோன்ற பழமை மற்றும் தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்களில் போட்டோஷூட் நடத்த வேண்டுமெனில் சுற்றுலா அமைச்சகத்திடம் இருந்து அனுமதியை முதலில் வாங்க வேண்டும்.. ஆனால், சல்மா எந்த அனுமதியும் வாங்காமல் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அடுத்ததாக, சல்மா அணிந்திருந்த டிரஸ்சும் சர்ச்சையாகி உள்ளது.. பிரமிடுகளுக்கு முன்பு அது மாதிரி பொருத்தமில்லாத ஆடைகளை அணிய கூடாதாம்.. வெள்ளை கலர் டிரஸ்ஸில், கவர்ச்சியாக போஸ் தந்துள்ளார். இதைதான் அந்நாட்டின் சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, இந்த போட்டோவை சல்மா, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. இவருக்கு 130,000க்கும் அதிகமான பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.. இந்த போட்டோக்களை பதிவிட்டதுடன், "18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதியில்லை" என்று ஒரு கேப்ஷனை குறிப்பிடவும்தான், இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்து விட்டது.
சல்மாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்த போட்டோகிராபர் ஆண்ட்ரஸ், ஆளே காணோமாம்.. இப்படி ஒரு சர்ச்சை எழுந்த உடனேயே, தன் சொந்த நாடான டென்மார்கிற்கு எஸ்.ஆகி விட்டார்.. இந்த விவகாரம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications