தாயின் மரணத்தால் மனநிலை பாதிப்பு... உறவினர்களின் வீடுகளில் சரமாரி துப்பாக்கிச் சூடு ... 8 பேர் பலி!
வாஷிங்டன் : அமெரிக்காவில் தாயின் மரணத்தால் மனநிலை பாதிப்புக்கு ஆளான நபர் ஒருவர், உறவினர்கள் வீடுகளில் புகுந்து அதிரடியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசவுரி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஆல்ரிட்ஜ் (36). சமீபத்தில் இவரது தாயார் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜோசப் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி டைரோன் என்ற இடத்தில் உள்ள தனது உறவினர்களின் வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார் ஜோசப். இதில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒரு பெண், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர் ஜோசப்பும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப் பட்டது. உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவரது உடல் அப்பகுதியில் இருந்த கார் ஒன்றில் இருந்து மீட்கப் பட்டது.
தாயாரின் மரணத்தால் தான் இந்த வெறிச்செயலை ஜோசப் மேற்கொண்டாரா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், ‘‘ஜோசப்பின் குடும்பத்தினர் நல்லவர்கள், எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பாங்கு படைத்தவர்கள்'' என்று அந்த பகுதியில் வசித்து வருகிற சார்லஸ் சுமித் என்பவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் குணம் அடைந்த பின்னர், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குப் பின்னரே இத்தாக்குதலுக்கான சரியான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சமீபகாலமாக அமெரிக்காவில் தொடர்ந்து வரும் துப்பாக்கி கலாசாரம், அங்குள்ள மக்களிடையே பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications