சரமாரியான "கன் ஷாட்".. தாறுமாறான "திரில்" தாக்குதல்.. "எல் சாப்போ" சிக்கியது இப்படித்தான்!
மெக்சிகோ சிட்டி: மெக்சிகா வரலாற்றிலேயே ஒரு தனி நபருக்காக பெரும் படையே களம் இறங்கியது இதுவே முதல் முறை என்கிறார்கள். எல் சாப்போ என்கிற போதைப் பொருள் தாதாவைப் பிடிக்க கிட்டத்தட்ட 2500 கமாண்டோ போலீஸாரை களம் இறக்கி கைது செய்துள்ள மெக்சிகோ போலீஸ் தற்போது அவர் தப்பி விடாமல் தடுக்க அடிக்கடி அவரை சிறைக்குள் அறையை மாற்றிக் கொண்டே இருக்கிறதாம்.
தற்போது எல் சாப்போ அடைக்கப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்துதான் ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் தப்பிநார் என்பதால் இந்த முறையும் அவர் தப்பி விடாமல் தடுக்கவே இப்படி அடிக்கடி அறையை மாற்றிக் கொண்டுள்ளனராம்.
அவருக்கு மிக அதிக அளவிலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை அவரை 8 முறை அறை மாற்றி விட்டனராம். தொடர்ந்து அவர் அறை மாற்றப்படுவார் என்றும் சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாபெரும் போதை தாதா
எல் சாப்போ மெக்சிகோவ அரசுக்குப் பெரும் சவாலாக விளங்கி வரும் போதை தாதா ஆவார். இவரது முழுப் பெயர் ஜோக்கின் எல் சாப்போ கஸ்மேன் லோயிரா. இதுவரை இவரை பிடித்து உள்ளே போட்டபோதெல்லாம் அவர் தப்பித்துப் போயுள்ளார்.

6 மாத ஓட்டத்திற்குப் பின் சிக்கினார்
இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சிறையிலிருந்து தப்பிய அவர் தற்போது மீண்டும் பிடிபட்டுள்ளார். அவரை அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர்.

24 மணி நேர கண்காணிப்பு
அல்டிபிளானோ என்ற சிறையில்தான் எல் சாப்போ அடைக்கப்பட்டுள்ளார். அவரது அறையை 24 மணி நேரமும் ரகசியக் கேமராவால் கண்காணித்து வருகின்றனர். அவரது அறைப் பகுதியைச் சுற்றிலும் பெருமளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலையில் இங்கிருந்து தப்பினார்
இதே சிறையில்தான் அவர் முன்பு அடைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்துதான் பலத்த காவலையும் மீறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தப்பினார். அப்போது பாத்ரூமுக்குக் கீழே உள்ள துளை வழியாக அவர் தப்பி ஓடி விட்டார்.

பாத்ரூம் டூ சுரங்கப் பாதை
அந்த பாத்ரூம் துளை வழியாக கீழே இறங்கிய அவர் அங்கு ஏற்கனவே வெட்டப்பட்டு வைத்திருந்த ரகசிய சுரங்கப் பாதை வழியாக தப்பி ஓடி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அறை மாற்றம்
தற்போது இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் கூட அவரை தொடர்ந்து அறை மாற்றி வருகின்றனர். இதுவரை 8 முறை அறையை மாற்றி விட்டனராம்.

அமெரிக்காவுக்கு அனுப்பவுள்ளனர்
தற்போது எல் சாப்போவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மெக்சிகா தயாராகி வருகிறது. அங்கு அவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவர் மீதான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தால் 400 வருடங்களுக்கு மேல் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.

வருடக்கணக்காகும்
இருப்பினும் இவரை நாடு கடத்துவதற்கு பல காலமாகும் என்றும் சொல்கிறார்கள். முன்பு ஒரு கைதியை நாடு கடத்த 6 வருடமானதாம். இதேபோல எல் சாப்போ வழக்கிலும் நீண்ட காலமாகும் என்கிறார்கள்.

மணிக்கணக்கில்தான் ஒரு அறையில்
தற்போது எல் சாப்போவை ஒரு அறையில் சில மணி நேரங்கள் மட்டுமே அடைத்து வைக்கின்றனர். பின்னர் அவரை மாற்றி விடுகின்றனர். இந்த அறைதான் என்றில்லாமல் அவ்வப்போது அவரை மாற்றிக் கொண்டே வருகிறார்களாம்.

2500 போலீஸார்
மெக்சிகோவில் ஒரு தனி நபரைப் பிடிக்க இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய படையைக் களம் இறக்கி இவரைத் தேடி வந்தனர். மொத்தமாக 2500 படையினர் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுக்கு பெரும் செலவு
இவரது நடமாட்டத்தை உளவு பார்க்கவே பெருமளவில் நேரம் விரயமாகியுள்ளது. இவர் குறித்த தகவல்களைச் சேகரித்து, அதை சரிபார்த்து அங்கு படையினர் செல்வார்கள். ஆனால் அவர் தப்பி விடுவார். இப்படியே காலம் போய்க் கொண்டிருந்தது.

மலையில் பதுங்கிய சாப்போ
போலீஸாரின் தீவிர வேட்டையால் தனது சொந்த மாகாணமான சினலோவா மாகாணத்தில் உள்ள ஒரு மலையில் போய்ப் பதுங்கிக் கொண்டார் எல் சாப்போ. அங்கும் விடாமல் போலீ்ஸ் படை தேடுதல் வேட்டையில் குதித்ததால் அவர் ஊருக்குள் மீண்டும் வந்தார்.

சீன் பென் பேட்டியால்
இந்த நிலையில்தான் நடிகர் சீன் பென்னுக்கு அளித்த பேட்டியால் அவரது இருப்பிடம் குறித்து போலீஸுக்கு உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து அந்த வீட்டை முற்றுகையிட்டு வளைத்துப் பிடித்து விட்டனர்.
வீட்டுக்குள் அதிரடி ஆக்ஷன்
இந்த நிலையில் அந்த வீட்டுக்குள் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையும், துப்பாக்கிச் சூடும், எல் சாப்போவைப் பிடித்த விதமும் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போல உள்ளது அந்த வீடியோ காட்சி.
நம்ம ஊரில் இப்படி ஒரு பயலும் இல்லையே.. எல்லாம் சப்பை "திருடங்களா" இருக்காங்களே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications