ஓவனை திறந்தா "உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"... ஆனா பாட்டி படு கெட்டி.. அசரலையே!
மைக்ரா ஓவனில் 3 அடி நீளத்திற்கு பாம்பு பழுப்பு நிறத்தில் இருந்தது.
லண்டன்: ஒரு பாட்டி சமைக்கலாம் என்று மைக்ரா ஓவனை திறந்தால், 3 அடி நீளமுள்ள பாம்பு விசுக்கென்று எழுந்து நின்றது. லண்டனில் சென்ற 28-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
மான்செஸ்டர் நகரில் உள்ள ஸ்டாக்போர்ட் பகுதியில் ஒரு வயதான தம்பதி வசித்து வருகிறார்கள். அந்த பாட்டிக்கு 82 வயதிருக்கும். சமைப்பதற்காக ஓவனை திறந்தபோதுதான் பழுப்பு நிற ஆப்பிரிக்கன் பாம்பு இருந்திருக்கிறது.
[சிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு!]

அது பாம்புதானா?
3 அடி நீளத்தில் சுருண்டு கிடந்த அந்த பாம்பு பாட்டி ஓவனை திறந்ததும் நெளிந்து நின்றது. பிறகு படக்கென்று ஓவனை மூடிவிட்டார் பாட்டி. ஆனால் பாம்பைப் பார்த்து அவர் ஷாக் ஆகவில்லை. மாறாக தைரியமாக நின்றார். ஏனென்றால் அது பாம்புதானா என்றே பாட்டிக்கு தெரியவில்லை. அதற்கு காரணம் பாட்டி கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கண் ஆபரேஷன் செய்திருக்கிறார்!!.

அது என்னன்னு பாருங்க
அதனால் பழுப்பு நிறத்தில் நெளிந்து கிடப்பது பாம்புதான் என்று உறுதியாக தெரியாமல், தனது கணவரை அழைத்து வந்தார். "ஏங்க என்னமோ கிடக்குது என்னான்னு பாருங்க" என்று அவரிடம் ஓவனை திறந்து காட்டினார். அப்போது அவரது கணவர் அது பாம்புதான் என்று சொன்ன பிறகுதான் பாட்டி நம்பினாராம்.

மீட்டு சென்றனர்
நம்ம ஊராக இருந்தால் கம்பை எடுத்து அடித்து நொறுக்கி பீஸ் பீஸாக்கியிருப்போம். ஆனால், பாட்டியும், தாத்தாவும் அப்படிச் செய்யவில்லை. மாறாக, உடனடியாக அங்கிருக்கும் உயிரின வதைதடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்தார்கள். அவர்கள் விரைந்து வந்து பாம்பினை மீட்டனர். மேலும் அந்த பழுப்பு நிற பாம்பினை யாராவது வளர்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
வெள்ளைக்கார பாம்பு
மீட்டு சென்ற பாம்பிற்கு சமி என்றும் ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள் அக்குழுவினர். பார்ர்ரா... பாம்புக்கு வந்த புது வாழ்வை.. பேரு வச்சு சோறும் போட்டு வளர்க்கிறாங்க.. நல்ல பாம்பா இருந்தாலும் வெள்ளைக்காரன் நாட்டுல பொறக்கணும் போல!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications