நிலநடுக்கத்தில் நடுவே.. 80 வயதில் முதியவர்களின் பாச போராட்டம்.. வாழ்வின் கடைசி நொடிகள் -வீடியோ!
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பேரழிவுக்கு மத்தியில், ஒரு முதிய கணவர் தனது மனைவியை காப்பாற்றிய காட்சி உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அழுகை வரவழைத்துள்ளது.
ஜூன் 24 தேதி வெனிசுலாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. குறிப்பாக தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது, பல இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேரிடரின் மத்தியில், ஒரு வீட்டின் செக்யூரிட்டி கேமராவில் பதிவான வீடியோ தற்போது கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சில நொடிகளில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்
ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ஹாலில் ஒரு முதிய தம்பதியினர் அமைதியாக உட்கார்ந்து இருந்தநப், இப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை உணர்ந்த அந்த பெரியவர் நடக்க முடியாமல் மெல்ல மெல்ல நடந்து, எழுந்திருக்க முடியாத தனது மனைவியின் அருகில் வேக வேகாக நடந்து சென்று, இரு கைகளையும் இருக்க பிடித்துக்கொள்கிறார்.
பாட்டியால் எழுந்திருக்க முடியாது என்பதை அவர் அருகில் இருக்கும் வாக்கர் மூலம் புரிந்துக்கொள்ள முடிகிறது. இத்தகைய சூழ்நிலை இருவரும் நம் வாழ்வின் கடைசி நிமிடம் இதன் என இருக்க கட்டிக்கொள்ளும் வீடியோ வாழ்வின் இறுதி நிமிடத்தை நம் கண் முன் கொண்டு நிறுத்துகிறது.
😢Así vivieron esta pareja de ancianos el terremoto de #Venezuela
— Cristian Crespo F. 🇨🇺 (@cristiancrespoj) June 25, 2026
Dos fuertes sismos sacudieron el miércoles el oeste de la capital de Venezuela, provocando el derrumbe de edificios en #Caracas, dejando personas atrapadas bajo los escombros, y llevaron a científicos a estimar… pic.twitter.com/aci0yLAxSe
இதற்கிடையில் நிலநடுக்கத்தால வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழ விழுவதும், ஆடுவதும், கிட்சனில் இருக்கும் பிரிட்ஜ் அதிர்ச்சி கதவுகள் திறப்பது என ஒட்டுமொத்த வீடும் தலைகீழானது. இதற்கிடையில் வீட்டில் இருந்த பூனை குட்டிகள் பீதியில் வீடு முழுவதும் சுற்றியது. இதை அனைத்தையும் இந்த தாத்தா பாட்டி இருக்கிய கை பிடிக்குள் இருந்து பார்த்தனர்.
அதிர்ஷ்டவசமாக தாத்தா பாட்டி இருந்த வீட்டுக்கு எதுவும் ஆகவில்லை, அடுத்த சில நொடிகளில் நிலநடுக்கம் நிறுவிட்டது... வீட்டிலும், மனதிலும் அமைதி திருப்பியது.. அவர்களுக்கு மட்டுமல்ல.. வீடியோவை பார்க்கும் நமக்கும் தான்.
உலகம் முழுவதும் பரவும் வீடியோ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. "உண்மையான அன்பு இதுதான்", "தனது உயிரைப் பற்றி யோசிக்காமல் மனைவியை காப்பாற்ற ஓடிய கணவர்", "திருமண உறவின் உண்மையான அர்த்தம் இதுதான்" போன்ற கருத்துகளை ஆயிரக்கணக்கான பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
பேரிடர் நேரத்தில் மனிதர்களின் உண்மையான அன்பும் பாதுகாப்பு உணர்வும் எப்படி வெளிப்படுகிறது என்பதை இந்த காட்சி காட்டுவதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.
வெனிசுலாவில் தொடரும் மீட்புப் பணிகள்
வெனிசுலாவில் ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், மின்சாரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதிகாரப்பூர்வ சேத விவரங்கள் முழுமையாக வெளியாகாத நிலையில், இந்த பேரழிவின் மனிதநேய முகமாக முதிய தம்பதியின் வீடியோ உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. பேரிடரின் நடுவிலும் அன்பும் அர்ப்பணிப்பும் எப்படி உயிருடன் இருக்கிறது என்பதை இந்த சில நொடிக் காட்சி நினைவூட்டுகிறது.












Click it and Unblock the Notifications