வங்கதேசத்துக்கு அடிக்கும் லக்? எலான் மஸ்க் கொடுக்கும் பெரிய கிப்ட்.. காய் நகர்த்திய முகமது யூனுஸ்
டாக்கா: நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வங்கதேசத்துக்கு எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் இணையதள சேவையை வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதுதொடர்பாக முகமது யூனுஸ் போட்ட பதிவு கவனம் பெற்றுள்ள நிலையில் எலான் மஸ்க்கால் வங்கதேசத்துக்கு ஜாக்பாட் அடிக்கிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசம் தற்போது நம்முடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. வங்கதேசத்தில் ேஷக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த நாடு பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது.

இதற்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தான் காரணம். வங்கதேச நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் இவர் தலைமையிலான ஆலோசகர்கள் தான் நம் நாட்டை அவ்வப்போது சீண்டும் வகையில் கருத்துகளை கூறி வருகின்றனர்.
இதனால் தற்போது வங்கதேசத்தின் நிதி நிலைமை மோசமாகி உள்ளது. இருப்பினும் கூட அங்கு அமைந்துள்ள இடைக்கால அரசு அதனை பற்றி கவலைப்படுவது போல் இல்லை. இந்தியா எதிர்ப்பிலேயே குறியாக உள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது வங்கதேசத்துக்கு எலான் மஸ்க்கால் லக் அடிக்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
அதாவது உலகின் பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்டா நிறுவனத்தின் சிஇஓ, எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளராக உள்ளார். இதுதவிர ஸ்டார்லிங் செயற்கைகோள் இணையதள வசதி வழங்கும் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இணையதள சேவையை வங்கதேசத்துக்கு கொண்டு வரும் வகையில் முகமது யூனுஸ் காய் நகர்த்தி உள்ளார். இதுதொடர்பாக முகமது யூனுஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் வீடியோ காலில் கலந்துரையாடி உள்ளனர்.
இதுதொடர்பாக இன்று முகமது யூனுஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எலான் மஸ்க்குடன் மீட்டிங் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது. இருதரப்பும் சேர்ந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் வங்கதேசத்தில் ஸ்டார்லிங் இணையதள சேவை செயல்பாட்டு வருவோம் என்று நம்புகிறோம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் முகமது யூனுஸ் - எலான் மஸ்க் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்து ஸ்டார்லிங் இணையதள சேவையை எலான் மஸ்க் வங்கதேசத்துக்கு வழங்கும் பட்சத்தில் அது அந்த நாட்டுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். அவரது நிறுவனத்தின் இணையதள சேவை என்பது சேட்டிலைட் மூலம் வழங்கப்படும் என்பதால் அனைத்து இடங்களிலும் அந்த வசதியை பயன்படுத்த முடியும். இதனால் வங்கதேசத்துக்கு எலான் மஸ்க்கால் அதிர்ஷ்டம் அடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இணையதள சேவை நம் நாட்டில் பயன்பாட்டில் இல்லை. மாறாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் , நெதர்லாந்து, டென்மார்க், போர்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. வங்கதேசத்துக்கும் இந்த வசதி கிடைக்கும் பட்சத்தில் ஸ்டார்லிங் இணையதள சேவையை பெற்ற நாடுகளின் பட்டியலில் இணையும்.












Click it and Unblock the Notifications