போருக்கு நடுவே எலான் மஸ்க் வெளியிட்ட 'திடீர்' அறிவிப்பு.. இஸ்ரேலில் டெஸ்லா கார் ஓனர்கள் குஷி!
இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையல், அந்நாட்டில் உள்ள டெஸ்லா சூப்பர் சார்ஜரல் பாயிண்ட்கள் இலவசமாக செயல்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள். இவர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் தற்போது வரை 950 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல இஸ்ரேல் தரப்பிலும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேலுக்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்கா ஏற்கெனவே போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. பிரிட்டன் தனது போர் கப்பலை அனுப்ப யோசித்து வருகிறது. அதேபோல நேட்டோ படைகள் இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் தற்போது எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது இஸ்ரேலில் உள்ள டெஸ்லா சூப்பர் சார்ஜர்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மஸ்க் ட்வீட் செய்திருக்கிறார். இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
புளோரிடா மற்றும் கலிபோர்னியா காட்டுத்தீ போன்ற அசம்பாவிதங்களின் போதும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போதும், இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும், டெஸ்லா நிறுவனம் பெரும்பாலும் இலவச சூப்பர்சார்ஜிங் வசதியை அறிவித்துள்ளது. அந்தவகையில் தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையேயான போரையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications