சண்டைக்கு வாங்க.. "ஒன் டூ ஒன்" மோதலாம்.. புடினை கூப்பிட்ட எலான் மஸ்க்.. அந்த பணயம்தான் மேட்டரே!
உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தன்னுடன் நேருக்கு நேர் சண்டை போட வேண்டும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் மழைதான் என்று கூற வேண்டும். சும்மாவே இவர் உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி எல்லாம் கிண்டலாகவும், விசித்திரமாக, சமயங்களில் சர்ச்சைக்குரிய வகையிலும் போஸ்ட் செய்வார்.
இப்போது.. முறை பொண்ணு ஊருக்கு வந்துட்டா சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு உக்ரைன் போர் இவருக்கு வசமாக வந்து சிக்கி உள்ளது.

உக்ரைன் - ரஷ்ய போர்
உக்ரைன் - ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்தே அதில் ஏதாவது கருத்து சொல்லி வருகிறார் அல்லது முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில்தான் உக்ரைனில் இணையத்தை வழங்குவதற்காக தனது ஸ்டார் லிங்கு சாட்டிலைட்டுகளை அவர் உக்ரைன் வான் பகுதிக்கு அனுப்பினார். எலான் மஸ்க்கின் இந்த செயல் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றது.

எலான் ம்ஸ்க்
இன்னொரு பக்கம் ஸ்பேஸ் ஸ்டேஷனை ரஷ்யா கைவிட்டால் அதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உதவி செய்யும். அதில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்ஸ்யூல் மூலம் பாதுகாப்பேன் என்று ரஷ்யாவிற்கு எதிராக உறுதி அளித்தார். ஸ்பேஸ் ஸ்டேஷன் இந்தியா அல்லது அமெரிக்கா மீது விழும் என்று கூறியதற்கு மஸ்க் இப்படி பதில் அளித்து இருந்தார். இதெல்லாம் போக ரஷ்யாவின் சேனல்களை நான் கட் செய்ய மாட்டேன்.

மோதல்
என் முன்னாள் துப்பாக்கியை காட்டினாலும் அப்படி செய்ய வேண்டும். உலகம் முழுக்க பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்து உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தன்னுடன் நேருக்கு நேர் சண்டை போட வேண்டும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உக்ரைனை பணயமாக வைத்து மோதலாம் என்று அவர் கூறியுள்ளார்.
Recommended Video

பணயம்
ஒரு நாட்டை பணயமாக வைத்து இவர் சண்டைக்கு அழைத்துள்ளார். இதை ரஷ்ய மொழியில் அவர் போஸ்ட் செய்துள்ளார். இவர் இந்த போஸ்டை பலர் ஷேர் செய்து அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். ஏனென்றால் புடின் நிறைய சண்டை முறைகள் தெரிந்தவர். அவர் டேக் வாண்டோ சாம்பியன். சமீபத்தில்தான் சர்வதேச டேக் வாண்டோ சங்கத்தில் இருந்து இவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில்தான் அவரை மஸ்க் சண்டைக்கு வா என்று அழைத்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications