500 டன் ஸ்பேஸ் ஸ்டேஷன் இந்தியா மீது விழுந்தால்! ரஷ்யா வார்னிங்.. நான் இருக்கேன்! எலான் மஸ்க் பதிலடி!
நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை இந்தியா, சீனா அல்லது அமெரிக்கா மீது விழ வைக்க முடியும் என்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இதற்கு பதில் அளித்துள்ளார்.
Recommended Video
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐஎஸ்எஸ் சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஐஎஸ்எஸ் பூமியில் இருந்து 400 கிமீ உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் இது பூமியை சுற்றிக்கொண்டு இருக்கிறது.
பூமியை 90 நிமிடத்திற்கு ஒரு முறை இது சுற்றும். சுமாராக தினமும் 16 முறை இது பூமியை சுற்றுகிறது. ஆனால் பெரும்பாலும் ரஷ்யாவிற்கு மேலே இது செல்லாது.

ரஷ்யா
1998ல் இது விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதில் இருந்தே கீழ்மட்ட சுற்றுப்பாதையில்தான் சுற்றுகிறது. அங்கு கொஞ்சம் புவி ஈர்ப்பு விசை இருக்கும். இதில் எப்போதும் 6-7 விண்வெளி வீரர்கள் இருப்பார்கள். தற்போது அங்கு 4 அமெரிக்க வீரர்கள், 2 ரஷ்ய வீரர்கள், 1 ஜெர்மனி வீரர் ஆகியோர் உள்ளனர். இப்போது ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய வீரர்கள் அமெரிக்க வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஒன்றாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஐஎஸ்எஸ் கீழ்மட்ட சுற்றுப்பாதையில்தான் சுற்றுகிறது. இதனால் இதை இயக்க அவ்வப்போது திரஸ்டர்கள் தேவைப்படும். அதாவது சிறிய அளவிலான என்ஜின்கள் நிறைய தேவைப்படும். இந்த ஐஎஸ்எஸ் தளத்தில் இரண்டு பாகம் உள்ளது. ஒன்று அமெரிக்க பாகம். இதுதான் ஐஎஸ்எஸ் அமைப்பை உறுப்புடன் வைத்து இருக்கிறது. அதாவது அதற்கு உள்ளே ஆக்சிஜன் உள்ளிட்ட தேவைகளை இதுதான் பூர்த்தி செய்கிறது.

Russian Orbital Segment (ROS)
Russian Orbital Segment (ROS) எனப்படும் இதில் இருக்கும் ரஷ்யாவின் பாகம்தான் ஐஎஸ்எஸ் பூமியில் விழாமல் பாதுகாக்கிறது. இதுதான் எஞ்சின்களை இயக்கி பூமிக்கு மேலேயே ஐஎஸ்எஸ் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறது. இதற்காக அவ்வப்போது ஐஎஸ்எஸ் எஞ்சின்களை விண்ணுக்கு ரஷ்யா அனுப்பும். இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா மோதலால் இதை ரஷ்யா இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் டிமிட்ரி ரோகோசின் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஐஎஸ்எஸ்
அதில், நீங்கள் ரஷ்யாவிற்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் ஐஎஸ்எஸ் சரியாக இயங்காது. அதை தவறான வட்டப்பாதையில் கொண்டு செல்வோம். ஏன் ஐரோப்பா, அமெரிக்கா மீது மோத செய்வோம். இது 500 டன் எடை கொண்டது. நாங்கள் ஏதாவது செய்து இந்தியா, சீனா மீது விழுந்தால் என்ன நடக்கும்? உங்களுக்கு அது தேவையா? ஐஎஸ்எஸ் ரஷ்யாவிற்கு மேலே பறக்கவில்லை. ரிஸ்க் எல்லாம் உங்களுக்குதான் என்று குறிப்பிட்டார்.

ஸ்பெஷல் ஸ்டேஷன்
அதாவது அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது ஐஎஸ்எஸ்ஸை விழ செய்வோம் என்று மிரட்டினார். இதற்கு தற்போது ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதாவது ஸ்பேஸ் எக்ஸ் என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளார். இந்த ஐஎஸ்எஸ் தளத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்ஸ்யூல் உள்ளது. இதை வைத்து அந்த ஸ்பேஸ் ஸ்டேஷனை இயக்க முடியும்.

எலான் மஸ்க்
ஸ்பேஸ் ஸ்டேஷனை இந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பாக இயக்க முடியும். சில கடைசி நேர மாற்றங்கள் மட்டுமே செய்ய வேண்டும். இதை வைத்தே நாங்கள் ஐஎஸ்எஸ்ஸை காப்பாற்றுவோம் என்ற ரீதியில் எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். முன்னதாக 2014ல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அமெரிக்கா ரஷ்யாவின் சோயஸ் விமானத்தை வைத்தே தனது வீரர்களை அனுப்பி வந்தது. இதை ரஷ்யா கிண்டல் செய்து வந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் பதிலடி
ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் டிமிட்ரி ரோகோசின் கூட இதை கிண்டல் செய்தார். ஆனால் 2020ல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதல் முறையாக ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு ஆட்களை அனுப்பியது. இதனால் இனி ரஷ்யாவை நம்பி அமெரிக்கா இல்லை. அப்போதே ரோகோசின் கிண்டலுக்கு எலான் மஸ்க் பதில் அளித்து இருந்தார். இப்போது மீண்டும் அவரின் கிண்டலுக்கு சரமாரியாக எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications