அமெரிக்கா ஓவர்.. ஐரோப்பிய அரசியலில் குதிக்கும் எலான் மஸ்க்? "நாஜி" வரலாறு சர்ச்சை பேச்சு.!
பெர்லின்: அமெரிக்க அரசியலில் டிரம்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து புயலைக் கிளப்பியவர் தொழிலதிபர் எலான் மஸ்க். இதற்கிடையே இவர் இப்போது அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பிய அரசியலிலும் குதித்துள்ளார். அங்குள்ள ஜெர்மனி நாட்டில் தீவிர வலதுசாரி கட்சியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் டாய்ச்லாண்ட் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்த எலான் மஸ்க், ஜெர்மனி மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க அரசியலில் நுழைந்து அதிரடி காட்டி வருபவர் எலான் மஸ்க். அங்கு அதிபர் தேர்தல் சமயத்தில் தொழிலதிபர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது வழக்கமான ஒன்று தான்.

எலான் மஸ்க்:
ஆனால், எலான் மஸ்க் அதை அடுத்த கட்டத்திற்கே எடுத்துச் சென்றுவிட்டார். வெறும் ஆதரவோடு நிற்காமல் டிரம்பிற்காக இறங்கி பிரச்சாரமும் செய்தார். அதற்கு மக்களிடையே நல்ல ஆதரவும் கூட கிடைத்தது. இதனால் டிரம்ப் நிர்வாகத்திலும் கூட எலான் மஸ்கிற்கு நல்ல ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே எலான் மஸ்க் இப்போது அடுத்தகட்டமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி அரசியலிலும் குதித்துள்ளார்.
ஜெர்மனியில் உள்ள தீவிர வலதுசாரி கட்சியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் டாய்ச்லாண்ட் கட்சியின் பிரச்சார கூட்டம் நேற்று நடந்த நிலையில், அதில் எலான் மஸ்க் பங்கேற்றார். ஜெர்மனி நாட்டு மக்கள் வலதுசாரி கட்சிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதுவே வளர்ச்சியைத் தரும் என்றும் அவர் பேசினார்.
ஜெர்மனி பிரச்சாரம்:
ஆல்டர்நேட்டிவ் ஃபார் டாய்ச்லாண்ட் கட்சியின் தலைவர் அலிஸ் வீடலுடன் இந்த பிரச்சார கூட்டத்தில் எலான் மஸ்க் வீடியோ கால் மூலம் கலந்து கொண்டார். ஜெர்மனி மக்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது மற்றும் ஜெர்மன் மக்களைப் பாதுகாப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த வாரம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் ஹிட்லர் சல்யூட் அடித்தாக சர்ச்சை கிளம்பிய நிலையில், ஒரே வாரத்தில் அவர் ஜெர்மனியிலேயே தீவிர வலதுசாரி கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எலான் மஸ்க் மேலும் பேசுகையில், "ஜெர்மன் கலாச்சாரம், ஜெர்மன் மதிப்புகள் குறித்து நீங்கள் பெருமைப்பட வேண்டும். பன்முக கலாச்சாரத்தை நாம் ஏற்றால் அது அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்கிறது. ஜெர்மனியில் அடுத்த மாதம் நடக்கும் தேர்தலுக்குப் பிறகு அலிஸ் வீடலை நான் அதிபராகப் பார்ப்பேன் என நம்புகிறேன்.. மீண்டும் ஜெர்மனியைச் சிறந்த நாடாக மாற்ற ஒன்று சேருங்கள்" என்று டிரம்ப் பாணியில் பேசினார்.
ஜெர்மனி மக்கள்:
ஜெர்மனி நாட்டில் நாஜி ஹிட்லர் படை என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக ஹிட்லர் தான். இதன் காரணமாகவே ஜெர்மனி மக்கள் எப்போதும் தீவிர வலதுசாரி கட்சிகளை ஒதுக்கியே வைத்திருப்பார்கள். இதனால் அங்கு எப்போதும் சென்டர்-லெப்ட் அல்லது சென்டர் -ரைட் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளே ஆட்சியைப் பிடிக்கும். அதுவும் பெரும்பாலும் கூட்டணி ஆட்சியாகவே இருக்கும். ஆனால், எலான் மஸ்க் தீவிர வலதுசாரி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாஜி வரலாற்றை மறக்கணும்:
நாஜி ஹிட்லர் படை குறித்து மறைமுகமாகப் பேசிய அவர், "இன்றைய தலைமுறையினர் தங்கள் பெற்றோர் செய்த பாவங்களுக்காகக் குற்றவாளியாகப் பார்க்கக்கூடாது. பெற்றார், தாத்தா- பாட்டி என்ன செய்தார்கள் என்பது வேறு கதை. கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை நினைத்து ஓவராக கவலைப்படக்கூடாது. அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்" என்று பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications