வங்கதேசத்துக்கு எலான்மஸ்க் கொடுத்த கிப்ட்.. அறிமுகமானது ஸ்டார்லிங் இணைய சேவை.. சிறப்பே இதுதான்
டாக்கா: வங்கதேசம் முழுவதும் அதிவேக இண்டர்நெட் சேவையை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வங்கதேசத்துக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இந்த இண்டர்நெட் சேவையின் வேகம் என்ன? கட்டணம் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்டை நாடான வங்கதேசம் தற்போது நம்முடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு அந்த நாட்டில் நடக்கும் இடைக்கால அரசு தான் முக்கிய காரணமாகும். இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் நம்முடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

அதேபோல் முகமது யூனுஸ் தொடர்ந்து வெளிநாடுகளின் தலைவர்களுடன் நெருக்கம் காட்டுவதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சீனா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் அவர் நெருக்கமாக உள்ளார். இந்த 3 நாடுகளும் நமக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள நிலையில் முகமது யூனுஸ் நெருக்கம் காட்டி வருகிறது.
இதுதவிர பிற வெளிநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு வருகிறார். குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளுடன் நட்பு பாராட்ட விரும்புகிறார். ஆனால் இன்னும் அது கைக்கூடவில்லை. இதற்கிடையே தான் உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் மூலம் ஸ்டார்லிங் செயற்கைகோள் இணையதள வசதியை வங்கதேசத்தில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை முகமது யூனுஸ் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் முகமது யூனுஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் வீடியோ காலில் கலந்துரையாடி உள்ளனர். அப்போது ஸ்டார்லிங் அதிவேக இணையதள சேவையை வங்கதேசத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று முகமது யூனுஸ் கோரிக்கை வைத்தார். அதற்கு பாசிட்டிவ்வான பதிலை எலான் மஸ்க் கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் தான் வங்கதேசம் முழுவதும் இன்று ஸ்டார்லிங் நிறுவனத்தின் அதிவேக இணையதள சேவை என்பது தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்லிங் இணையதள சேவை என்பது சேட்டிலைட் மூலம் நேரடியாக வழங்கப்படும். எந்த இடையூறும் இன்றி இந்த இணையதள சேவை விரைவாககிடைக்கும். இதுதொடர்பாக ஸ்டார்லிங் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஸ்டார்லிங் அதிவேக இண்டர்நெட் சேவை வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி முகமது யூனுஸின் உதவியாளர் பயஸ் அஹமது தையிப் கூறுகையில், ‛வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் இண்டர்நெட் சேவையை பயன்படுத்த மாதம் 4,200 taka (அமெரிக்க டாலரில் 35 டாலர். இந்திய மதிப்பில் எடுத்து கொண்டால் ரூ.2,995 கட்டணமாக செலுத்த வேண்டும்) கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் இண்டர்நெட் சேவையை பெறுவதற்கான கட்டமைப்புகளை பெற ஒருமுறை கட்டணமாக ரூ.47,000 Taka (இந்திய மதிப்பில் சுமார் ரூ.33 ஆயிரம்)செலுத்த வேண்டும். இது அதிவேக இண்டர்நெட் சேவையை வழங்க உள்ளது'' என்றார்.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இணையதள சேவை நம் நாட்டில் பயன்பாட்டில் இல்லை. மாறாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் , நெதர்லாந்து, டென்மார்க், போர்சுக்கல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இணையதள சேவை நடைமுறையில் உள்ளது. அந்த வரிசையில் இப்போது வங்கதேசம் இணைந்துள்ளது.
எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் சூழலில் அதில் முக்கியமானது ஸ்டார்லிங்க். இந்த ஸ்டார்லிங்க் அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்குவதே ஸ்டார்லிங்கின் நோக்கம்.. அதாவது வழக்கமான டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு டவரை வைத்து அதன் மூலம் இணையச் சேவை வழங்கும். ஆனால், ஸ்டார்லிங்கிற்கு அதுபோல டவர் எல்லாம் இல்லை.
நேரடியாக விண்வெளிக்கு சாட்டிலைட் அனுப்பி, அதன் மூலம் இணையச் சேவை வழங்கும். டெலிகாம் நிறுவனங்களால் கிராமப்புற பகுதிகளில் இணையச் சேவை வழங்குவதில் சிக்கல் இருக்கும். ஆனால் உலகின் எந்தவொரு மூலைக்கும் ஸ்டார்லிங்க் மூலம் அதிவேக இணையச் சேவை வழங்க முடியும் என்பதே இதன் சிறப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications