பாகிஸ்தானில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி.. டிவி சேனல்கள் கட், சமூக வலைத்தளங்களுக்கும் நெருக்கடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை உருவாகியுள்ளது. அங்குள்ள டிவி சேனல்கள் ஒளிபரப்புக்கு கட்டுப்பாடு வந்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்லும் பிரதான சாலைகளில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக இஸ்லாமிய அமைப்புகள் சில இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் பல லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து பாகிஸ்தான் போலீஸ் மற்றும் துணை ராணுவம், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டும் ஆபரேஷனை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.

போர்க்களம்
இந்த நடவடிக்கையின் போது, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் நடைபெற்ற இடம் போர்க்களமானது.
|
நேரடி ஒளிபரப்பு இல்லை
ஆனால் போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு டிவி சேனல்களில் அரசியல் தொடர்பான விவாதங்கள்தான் காட்டப்படுகின்றன.
|
உத்தரவு
போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையை நேரடியாக ஒளிபரப்புக்கூடாது என்ற உத்தரவை பாகிஸ்தானில் மின்னணு ஊடகங்கள் ஒழுங்கு முறை ஆணையமான 'பெம்ரா' பிறப்பித்துள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்ற சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. தேசப்பாதுகாப்புதான் முக்கியம் என்று அரசு கூறியுள்ளது.
|
அவசர நிலை
இதனால், பாகிஸ்தானில் அவசர காலநிலை பிறப்பிக்கப்பட்டதை போன்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த போராட்டத்திற்கு காரணம், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சத்திய பிரமாணம் செய்யும்போது அதில் சில வரிகளை மாற்றி பிரமாணம் எடுக்கலாம் என்று சட்டத்துறை அமைச்சர் ஜஹித் ஹமீது சட்டத்திருத்தம் செய்ய முயன்றதுதானாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications