Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்பாமிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவி உடல் போனி கபூரிடம் ஒப்படைப்பு

ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று எம்பாமிங் செய்யப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா வருகிறது- வீடியோ

    துபாய்: ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்தும் பணிகள் முடிவுற்றதையடுத்து போனி கபூரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.

    துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

    ஆனால் நேற்று முன்தினம் அவருக்கு துபாயில் உள்ள ரிஷி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த அறிக்கையை நேற்று கல்ஃப் நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது.

    அறிக்கையில் தகவல்

    அதில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் அவரது ரத்தத்தில் மதுபானம் இருந்ததாகவும் அறிக்கையில் இருந்தது.

    தாமதம்

    தாமதம்

    இந்நிலையில் அவரது உடலை மும்பை கொண்டு செல்வதில் தாமதமானது. துபாய் போலீஸிடம் இருந்து இந்த வழக்கு பொது வழக்கறிஞருக்கு மாற்றப்பட்டது.

    துபாய் போலீஸ்

    துபாய் போலீஸ்

    ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக துபாய் போலீஸார் விசாரணை முடிவுக்கு வந்தது. இதையடுத்து உடலை ஒப்படைக்கும் அனுமதி சான்றிதழை அவரது குடும்பத்தாரிடம் துபாய் போலீஸ் கொடுத்தது.

    இன்று மும்பை

    இன்று மும்பை

    அனுமதி சான்றிதழ் கிடைத்த நிலையில் ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்த எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நடைமுறை முடிந்தவுடன் போனிகபூரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து துபாய் விமான நிலையத்திலிருந்து போனி கபூர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீதேவியின் உடலுடன் மும்பை புறப்படுகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+