மாஜி காதலை சொல்லாமல் இருக்க 5 இலக்க தொகை... இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு மிரட்டல்!
சிட்னி: இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் இயோன் மோர்கன் அவரது முன்னாள் காதலியுடன் உல்லாசமாக இருந்த விவகாரத்தை பத்திரிகைகளில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி பணம் கேட்டு மிரட்டல் இ-மெயில் வந்த சம்பவம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டலை விடுத்தது, முன்னாள் காதலியின் இன்னாள் காதலன் என்பது கூடுதல் தகவலாகும்.

உல்லாசம்
இங்கிலாந்து, ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இயோன் மோர்கன். இவருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஐந்து வருடங்கள் முன்பு உறவு இருந்தது. அந்த பெண்ணுடன் டேட்டிங் செய்து சுற்றித்திரிந்தார் மோர்கன். தற்போது அந்த பெண் வேறு ஒருவருடன் உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. உலக கோப்பை போட்டிக்கும் தயாராகிவருகிறது.

மிரட்டல் இமெயில்
இந்நிலையில், இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு இ-மெயில் வந்தது. அந்த மெயிலில், "கேப்டன் மோர்கன் காதல் பற்றிய ரகசியங்களை இங்கிலாந்து மற்றும், ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், ஐந்து இலக்க பணம் அளிக்க வேண்டும்" என்று மிரட்டப்பட்டிருந்தது.

முன்னாளை மிரட்டிய இன்னாள்
இதுகுறித்து பிரிட்டீஷ் மற்றும் ஆஸ்திரேலிய போலீசார் நடத்திய விசாரணையில், மோர்கனின் முன்னாள் காதலியிடம் தற்போது உறவு வைத்துள்ள நபர்தான், இந்த ரகசியங்களை தெரிந்து கொண்டு மிரட்டல்விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் எச்சரிக்கப்பட்டார்.

விடமாட்டோம்
இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மேலாண் இயக்குநர் பவுல் டவுன்டன் கூறுகையில், "முத்தரப்பு கிரிக்கெட் மற்றும் உலக கோப்பைக்காக தயாராகிவரும் இங்கிலாந்து அணியின் கவனத்தை குலைக்க விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications