26 டிகிரிக்கே வெப்ப அலை வார்னிங்கா? எங்க ஊர் ஏசி டெம்பரேச்சர் இது.. இங்கிலாந்தை கலாய்த்த நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் இந்த மாத இறுதிய்யில் வெப்ப அளவு 26 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்பதால் மக்கள் கவனமாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த வெப்ப அலை வார்னிங்கை பார்த்ததும் இந்தியாவில் உள்ள நெட்டிசங்கள் திகைத்ததோடு... இதெல்லாம் ஒரு ஹீட்? இதற்கு ஒரு வார்னிங்க் வேறா? என கலாய்த்து இணையத்தில் டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள்..

உலகம் முழுவதுமே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பருவநிலை மாறுபடு, புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு காரணங்களால் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடப்பு ஆண்டில் வெப்பம் மிகக் கடுமையாக இருந்தது. 40 டிகிரி வெப்பத்திற்கும் மேலாக பல நகரங்களில் வெப்பம் பதிவாகி இருந்தது.

England Temperature Trend Weird World

மும்பை, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இப்போது தென்மெற்கு பருவமழை தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது. சரி இதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வரலாம்.. இங்கிலாந்து நாட்டில் ஜூன் மாத இறுதியில் வெப்ப அலை வீசலாம் என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது 26 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு உயரலாம் என்பதால் மக்கள் கவனமாக இருக்குமாறு அந்த எச்சரிக்கை உள்ளது. இந்த வெப்ப அலை வார்னிங்கை பார்த்ததும் இந்தியாவில் உள்ள நெட்டிசங்கள் திகைத்ததோடு... இதெல்லாம் ஒரு ஹீட் இதற்கு ஒரு வார்னிங்க் வேறா? என கலாய்த்து இணையத்தில் டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள்..

நெட்டிசன்கள் பலரும் இந்தியாவில் நாங்கள் வைக்கும் ஏசி டெம்பரச்சேரை விட 2 டிகிரிதான் அதிகம் என ஸ்மைலியுடன் பதிவிட்டு இருக்கிறார்கள். அதேபோல, இதெல்லாம் மும்பையில் குளிர்காலம் என்று சொல்வோம் என்று கூறியுள்ளனர். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், டெல்லியில் இங்கிலாந்தில் வெப்ப அலைக்கு விதிக்கப்பட்டுள்ள வார்னிங்கை விட இரண்டு மடங்கு அதிக வெப்பத்தையே சமாளிக்கிறோம். பலவீனமான மக்கள்" எனக் கூறியுள்ளார்.

இன்னொரு நெட்டிசனோ ஒரு படி மேலே போய், எனது ஏசி தற்பொது இங்கிலாந்தின் வெப்ப அலை வார்னிங்க் லெவலில் உள்ளது என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 26 டிகிரிக்கே வெப்ப அலை விதித்தால் இங்கிலாந்து மக்கள் இந்தியாவுக்கு வந்தால் எப்படி சமாளிப்பார்கள் எனப் பதிவிட்டு இருக்கிறார். இப்படி இங்கிலாந்து வெப்ப அலை வாட்டி வதைக்கிறதே... என கலாய்த்தும் சில நெட்டிசங்கள் கூறியிருக்கிறார்கள்.

அதே வேளையில், வெப்ப மண்டல பகுதியில் வசிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் எல்லாம் ஒரு ஹீட் ஆக தெரியாது.. எனவும் ஆனால் குளுமையான சீதோஷ்ண நிலையில் வாழ்ந்து பழக்கப்பட்ட இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய பகுதி மக்களுக்கு இந்த வெப்பத்தை தாங்குவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் என்று பதிவிட்டு இருக்கிறார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+