சோறுபோட்டு மாளவில்லை.. சிறைகளிலுள்ள 407 இந்தியர்களை தாயகம் அனுப்புகிறது இங்கிலாந்து
லண்டன்: இங்கிலாந்து சிறையில் உள்ள கைதிகளை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில் இதற்கான ஒப்பந்தம்போடப்பட உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சிறைகளில் வெளிநாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 127 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் 2,233 பேர் உள்ளனர்.

அதிகபட்சமாக பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் 509 பேர் அங்கு சிறையில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவை சேர்ந்த 407 கைதிகள் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளை பராமரிப்பதற்கும், சாப்பாடு கொடுப்பதற்கும் ஆகும் செலவு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளை சேர்ந்த கைதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.
அதன்படி, ஜமைக்கா நாட்டை சேர்ந்த 300 கைதிகளை அந்தநாட்டிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியா அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவை அடுத்து, அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. கைதிகளை அனுப்புவது குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்குள்ள இந்திய கைதிகள் தாயகம் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
நான்கு வருடங்களுக்கும், அதற்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications