கோஹ்லியை உருகி உருகி காதலித்த கிரிக்கெட் வீராங்கனை.. கல்யாண செய்திக்கு என்ன சொன்னாங்க தெரியுமா?
விராட் கோஹ்லியை காதலித்த பெண் தற்போது விராட்- அனுஷ்கா திருமணம் குறித்து பேசியுள்ளார்.
Recommended Video

லண்டன்: இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் விராட் கோஹ்லியை காதலித்த பெண் ஒருவர் அதுகுறித்து பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து பெண்கள் அணியில் விளையாடும் 'டேனியல்லே வியாட்' என்ற அந்த வீராங்கனை கோஹ்லியை பல காலமாக காதலித்து வந்தார். இந்த விஷயம் இணையம் முழுக்க வைரலாக இருந்தது.
தற்போது கோஹ்லி அனுஷ்கா திருமணம் குறித்து இந்த வீராங்கனை வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதே போல் கோஹ்லியின் ரசிகர்களும் அந்த வீராங்கனைக்கு கோஹ்லியின் திருமண புகைப்படங்களை அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர்.
|
கோஹ்லி லவ்
கோஹ்லி 2013ல் அனுஷ்கா சர்மாவை பார்த்து இருந்த சமயம், அப்போது தான் இருவரும் இணையம் முழுக்க வைரலாக இருந்தார்கள். சரியாக 2014ல் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல்லே வியாட் என்ற இங்கிலாந்து பெண்கள் அணி வீராங்கனை கோஹ்லிக்கு ஒரு டிவிட் செய்தார். அந்த டிவிட்டில் வெளிப்படையாக ''கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று கேட்டு இருந்தார். இந்த டிவிட் வைரல் ஆகி இருந்தது.
|
கோஹ்லி கொடுத்த கிப்ட்
இந்த காதல் விஷயம் தெரிந்து கோஹ்லி சில முறை மரியாதைக்காக டேனியல்லேவை சந்தித்து இருக்கிறார். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் கோஹ்லி, அனுஷ்கா சர்மா திருமணம் குறித்த உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானது. அதே சமயத்தில் கோஹ்லி டேனியல்லேவிற்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தார். மேலும் ''அந்த பேட்டில் விளையாடுவதற்கு காத்து இருக்கிறேன். கோஹ்லிக்கு நன்றி'' என்று டேனியல்லே டிவிட் செய்து இருந்தார்.

பிடிக்காது
டேனியல்லே கோஹ்லிக்கு பின் தீவிரமாக சுற்றுவது உலகம் முழுக்க வைரல் ஆனது. இங்கிலாந்து அணியுடன் நடக்கும் போட்டியில் கூட கோஹ்லிக்கு டேனியல்லே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். மேலும் அடிக்கடி கோஹ்லியை வந்து சந்தித்து சென்றார். ஆனால் கோஹ்லியின் அம்மா ஒருமுறை பேட்டியில், ''கோஹ்லிக்கு இந்திய பெண்ணை தான் திருமணம் செய்து வைப்பேன்'' என்று கூறினார். தற்போது கோஹ்லிக்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் நடந்துள்ளது.
|
என்ன சொன்னார் தெரியுமா
தற்போது கோஹ்லி-அனுஷ்கா திருமணம் குறித்து இவர் டிவிட் செய்துள்ளார். அதில் ''வாழ்த்துகள் அனுஷ்கா சர்மா- கோஹ்லி'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட்டிற்கு இந்திய ரசிகர்கள் சிலர் வருத்தமாக பதில் அளித்து வருகின்றனர். இதுவும் கடந்து போகும் என்பது போல பலரும் பதில் அளித்து உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications