உலகத்திலேயே "அப்படியாப்பட்ட" நடிகை இவர்தானாமே...!
லாஸ் ஏஞ்சலெஸ்: வாழும் நடிகைகளிலேயே மிகவும் செக்ஸியான நடிகை என்ற பெயர் எமிலியா கிளார்க்குக்குக் கிடைத்துள்ளது. கேம் ஆப் த்ரோன்ஸ் டிவி தொடரில் நடித்தவர் எமிலியா.
28 வயதா எமிலியாதான் உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண் என்று எஸ்கொயர் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
இதற்கு முன்பு ஸ்கார்லெட் ஜோஹன்சன், பெனிலோப் குரூஸ் போன்றோர் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளனர்.

திறமைசாலி
எமிலியா குறித்து எஸ்கொயர் கூறுகையில், தனது எதிர்ப்புகளை திறம்பட சமாளிக்கிறார் எமிலியா. இனிமையானவர், அதேசமயம், கடுமையானவரும் கூட. எதையும் உறுதியுடன் மேற்கொள்கிறார். எதையும் இலகுவாகவும் எடுத்துக் கொள்கிறார்.

அறிவாளி
அறிவுப்பூர்வமாக மட்டுமல்லாமல் திறமைசாலியாக, நல்ல உடல் கட்டுடன் கூடிய அழகியாகவும், செக்ஸ் அப்பீல் உள்ளவராகவும் திகழ்கிறார் எமிலியா. ராணியாகவும் அவரால் நடிக்க முடியும், நல்ல தோழியாகவும் நடிக்க முடியும். சாதாரண பெண்ணாகவும் நடிக்க முடியும் என்று புகழாரம் சூட்டியுள்ளது எஸ்கொயர்.

ஏற்கனவே சிறந்த பெண்
ஏற்கனவே ஜிக்யூ என்ற இதழும் கூட இந்த ஆண்டின் சிறந்த பெண்ணாக எமிலியாவைத் தேர்வு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகி கலீஸி
எச்பிஓவில் இடம் பெறும் கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியலில் நாயகிதான் எமிலியா. அதில் இவர் கலீஸி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

குட்டீஸ்களுக்குப் பிடிக்குமாமே
முக்கியமாக குழந்தைகளுக்கு இவரை பிடித்துள்ளது. பல குழந்தைகளுக்கு இவரது பெயரை வைத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications