Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடியை பக்கத்தில் அமர வைத்து.. கார் ஓட்டி சென்ற எத்தியோப்பிய பிரதமர்! இதுதான் டிரெண்டிங்

Subscribe to Oneindia Tamil

அடிஸ் அபாபா: பிரதமர் மோடி இப்போது அரசு முறை பயணமாக ஜார்டன், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஜார்டனில் பிரதமர் மோடியை அந்நாட்டுப் பட்டத்து இளவரசர் தனது சொந்த காரில் அழைத்துச் சென்ற நிலையில், எத்தியோப்பியாவிலும் அதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்குப் பிரதமர் மோடியை எத்தியோப்பியா பிரதமர் தனது காரில் அழைத்துச் சென்றார்.

சீனாவில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் ஒரே காரில் பயணித்தனர். அது சர்வதேச அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் இந்தியா ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க புதின் இந்தியா வந்தபோதும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒரே காரில் பயணித்தனர்.

Ethiopian PM Abiy Ahmed Drives PM Modi in Personal Car Special Gesture Mirrors Jordan Car Diplomacy

பிரதமர் மோடி

இது தொடர்பான போட்டோக்கள் வெளியாகி அது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இதற்கிடையே பிரதமர் மோடி இப்போது ஜார்டன், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாகச் சென்றுள்ளார். கடந்த டிசம்பர் 15ம் தேதி அவர் இதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டார். முதலில் ஜார்டன் சென்ற பிரதமர் மோடி, பிறகு அங்கிருந்து எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்குச் செல்கிறார்.

காரில் அழைத்துச் சென்றார்

பிரதமர் மோடியின் இந்தப் பயணத்திலும் கார் பயணங்கள் கவனம் பெற ஆரம்பித்துள்ளது. ஜார்டனில் இருந்து நேற்று எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடியை நோபல் அமைதி விருது பெற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். மேலும், தனது காரிலேயே அவர் பிரதமர் மோடியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில் அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் பூங்காவிற்கும் பிரதமர் மோடியை அழைத்துச் சென்றார்.

எத்தியோப்பியா

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்தப் பயணம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தியா- எத்தியோப்பியா உறவுகளைக் கொண்டாடும் விதமாக இந்தப் பயணம் அமைகிறது. பிரதமருக்கு எத்தியோப்பியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய பார்ட்னர் நாடாக இருக்கும் எத்தியோப்பியா பிரிக்ஸ் உறுப்பினராகவும் உள்ளது," என்றார்.

பிரதமர் மோடி இந்தப் பயணத்தில் எத்தியோப்பியப் பிரதமருடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, எத்தியோப்பிய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார். மேலும், அங்கு வாழும் புலம்பெயர் இந்தியர்களையும் சந்தித்து உரையாற்றுகிறார்.

Ethiopian PM Abiy Ahmed Drives PM Modi in Personal Car Special Gesture Mirrors Jordan Car Diplomacy

ஜார்டன்

முன்னதாக பிரதமர் மோடி ஜார்டன் சென்றிருந்த போது, ஹுசைனியா அரண்மனையில் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கும் கூட பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II அவரே தனது காரில் பிரதமர் மோடியை அழைத்துச் சென்றிருந்தார். இது தொடர்பான போட்டோக்களையும் அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இப்போது அதுவே தான் எத்தியோப்பியாவிலும் தொடர்கிறது. பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புதின் கார் பயணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இது ஒரு டிரெண்ட் போல ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+