திடீரென கிரீன்லாந்தில் இறங்கிய ராணுவம்.. டிரம்பிற்கு செக் வைத்த ஐரோப்பிய நாடுகள்.. அடுத்து என்ன!

Subscribe to Oneindia Tamil

கோபன்ஹேகன்: கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கப் போவதாக டிரம்ப் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அங்கு ஒருவிதப் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கிடையே கிரீன்லாந்து பகுதிக்கு இப்போது சில ஐரோப்பியப் படைகள் சென்று சேர்ந்துள்ளன. டிரம்ப் கருத்துகளால் கிரீன்லாந்து குறித்த சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், ராணுவப் படைகள் அங்குக் களமிறக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த சில காலமாகவே கிரீன்லாந்து மீது டிரம்ப் அரசு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவைப்படுவதாக டிரம்ப் சொல்லி வருகிறார். டிரம்பின் இந்தக் கருத்துக்கு கிரீன்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் போதிலும் டிரம்ப் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியே வருகிறார்.

Greenland US Donald Trump

கிரீன்லாந்து

அதிலும் அமெரிக்காவின் ராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்தே வருவதாக ட்ரம்ப் கூறியிருந்தார். ஒருவேளை கிரீன்லாந்தில் அமெரிக்கப் படைகள் இறங்கினால் அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் இது பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என உலக நாடுகள் உற்றுக் கவனித்து வந்தன.

கிரீன்லாந்து என்பது டென்மார்க் கீழ் இருக்கும் சுயாட்சி பெற்ற ஒரு பகுதியாகும். இதன் மக்கள் தொகை குறைவு என்றாலும் கூட இது அமைந்துள்ள இடம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆர்டிக் பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், கிரீன்லாந்து யாருடைய கண்ட்ரோலில் இருக்கும் என்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஐரோப்பியப் படைகள்

இதற்கிடையே கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்குக் கணிசமான அளவுக்கு நேட்டோ ராணுவ வீரர்களை நிரந்தரமாக நிலைநிறுத்தத் திட்டமிட்டு வருவதாக டென்மார்க் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை க்ரீன்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளன. இப்போது முதல் பேட்ஜ் ஐரோப்பிய வீரர்கள் கிரீன்லாந்திற்குச் சென்று சேர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தான் அமெரிக்கா, டென்மார்க், கிரீன்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், ஐரோப்பிய ராணுவம் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. கிரீன்லாந்து குறித்த அமெரிக்காவின் கருத்துகளை லேசாக கருத முடியாது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.

அமெரிக்கா சொல்வது என்ன

கிரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனா ஆக்கிரமிக்க விரும்பினால், அதைப் பாதுகாக்கும் திறமை டென்மார்க்கிடம் இல்லை என்பதை டிரம்ப்பின் நிலைப்பாட்டு. கனிம வளம் நிறைந்த கிரீன்லாந்து, அரசியல் ரீதியாகவும் முக்கியமானது என்பதால் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புக்கு இன்றியமையாதது என டிரம்ப் கூறுகிறார். அதைக் கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்தே வருகிறது.

சிக்கல்

டிரம்ப்பின் இதுபோன்ற பேச்சுகள் நேட்டோ அமைப்பின் எதிர்காலம் குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. அதாவது டென்மார்க் என்பது நேட்டோவின் உறுப்பு நாடாகும். எந்தவொரு நேட்டோ உறுப்பு நாட்டின் பகுதியையும் எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும் ஒட்டுமொத்த நேட்டோ அமைப்பும் அதற்கு எதிராக நிற்க வேண்டும். அதன்படி அமெரிக்க ராணுவம் கிரீன்லாந்தை கைப்பற்ற முயன்றால், அது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணிக்கே எதிராக அமையும்.

தற்போது வரை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் டென்மார்க்கிற்கு தான் ஆதரவளித்துள்ளன. அதை வெளிப்படுத்தும் விதமாகவே இப்போது ஐரோப்பிய நாடுகள் கிரீன்லாந்திற்கு தங்கள் ராணுவத்தை அனுப்பியுள்ளன. இது அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஒரு எச்சரிக்கை மெசேஜ் ஆகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+